சனி, 26 செப்டம்பர், 2015

வாட்ஸ்அப்

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.
என்ன ஆபத்துகள்?
***********************
* யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.
* உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.
* கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.
* உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.
* உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.
எப்படி தவிர்க்கலாம்?
****************************
உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
முடிந்த வரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்...!!!
ஆகையால் எச்சரிக்கையுடன் இருங்கள் சகோதரிகளே !!!

Related Posts:

  • Jobs * Required for a fast growing company * OFFICE BOY Email CV to: amy@royalbc.net karen@royalbc.net. This job was classified under Secretarial &am… Read More
  • கலவரங்களை தூண்ட நாடெங்கும் கலவரங்களை தூண்ட ஆர்.எஸ்.எஸ் திட்டம்!நாடெங்கும் கலவரங்களை உருவாக்கி இந்து இசுலாமியர்கள் இடையே மோதலை உண்டாக்குவதன் மூலம் வரும் நாடாளுமன்ற தே… Read More
  • Bangladeshi Muslims Rioting Against Blasphemy Commit Blasphemy There were rows of bookstalls selling old books there even until Sunday noon. Hifazat-e Islam’s violent blockade of Dhaka on Sunday has gutt… Read More
  • Mumbai have shut down work The traders of Mumbai have shut down work since 8 days to protest against extortion by Maharastra State Gov in the name of LBT Tax. Still no ne… Read More
  • என்ன தான் வழி? அஸ்ஸலாமு அலைக்கும். இந்தியா முழுவதும் தற்பொழுது இஸ்லாமியர்கள் மீது குறி வைத்து பொய் வழக்குகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள் இதை தடுக்க என்ன தான் … Read More