திங்கள், 21 செப்டம்பர், 2015

ஈத் பெருநாளில் மாடுகள் பலியிடுவதை தடுத்து நிறுத்தி, ஆடுகளை பலியிட்டு ஈத் பெருநாள் கடமையை செய்வித்தார்! ஆங்கிலேயர்களின் கலவர சூழ்ச்சி முறியடிக்கப் பட்டது!


தான்!} என்று விஷமப் பிரசாரம் செய்து, இந்து-
முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, அதன்மூலம்
ஆங்கிலேயர்கள் குளிர்காய நினைத்தனர்!!
கெயித்'யின் சூழ்ச்சியை அறிந்த மன்னர் பகதூர் ஷா,
ஈத் பெருநாளில் மாடுகள் பலியிடுவதை தடுத்து நிறுத்தி,
ஆடுகளை பலியிட்டு ஈத் பெருநாள் கடமையை செய்வித்தார்!
ஆங்கிலேயர்களின் கலவர சூழ்ச்சி முறியடிக்கப்
பட்டது!
ஆங்கிலேய அதிகாரி, "மேஜர் ஹட்சன்" என்பவன்
கைது செய்து சிறையில் இருந்த மன்னர் பகதுர்ஷா-
வுக்கு காலை உணவாக கொடுத்தது என்ன தெரியுமா?
அவரது மகன்களான மிர்சாமொஹல், கிலுருகல்தான்
ஆகிய இரண்டு மகன்களின் தலைகளை
வெட்டி,ஒருதட்டில் வைத்து,அதனை துணி ஒன்றால் மூடி
எடுத்துவந்து கொடுத்தான்!
நினைத்துப்பாருங்கள்! எத்துனை கொடூரமான செயல்
என்று! மன்னர் பகதுர்ஷா'வின் மனத்துடிப்பு
எப்படி இருந்திருக்கும்? என்பதையும்
ஆங்கிலேயர்களுக்கு அவர்மீது இருந்த
கோபத்தையும்,வன்மத்தையும் எண்ணிப்பாருங்கள்!
இத்தகைய கொடுமைகளை செய்த,ஆங்கிலேயரிடம்
{வீர்சாவர்கர் போல) அவர் மண்டி இடவில்லை,!
தனது மகன்களின் தலை வெட்டப்பட்டதற்கு பின்பும்
அவர் இந்தியாவுக்கு விசுவாசியாக இருந்தார். !
தனது மகன்களதலை ஆங்கிலேயர்களால்
வெட்டப்பட்ட போதும், அவர் அதனை இந்திய
தேசத்துக்காக தனது மகன்கள் செய்த தியாகமாக
நினைத்து தாங்கிகொண்டார்!
இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல்
இருந்த அவரை வேறுவழியின்றி,ஆங்கிலேயர்கள்பர்
மாவின் ரங்கூனுக்கு நாடு கடத்தினர்! அங்கே
17.11.1862-யில் மரணம் அடைந்த மன்னர்
பகதுர்ஷவின் சமாதியை பிறகு நேதாஜி சுபாஷ்
புதுப்பித்துக் கட்டினார்.அவரது சமாதியில் இருந்து
ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து,தான்
வைத்திருக்கும் கைத்தடியின் பிடிக்குள் வைத்துகொண்டார்!
ரங்கூனில் நடந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் ,"நமது
வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும்,பகதுர்ஷாவிடம்
இருந்ததுபோன்ற நாட்டுப்பற்றில் அணுவளவாவது
இருக்கும்வரை ,நமது( இந்துஸ்தான் }நாட்டின் போர்வாள்
கூர்மையுடன் இருக்கும்,ஒருநாள் லண்டன்
வாசல்கதவை அது தகர்க்கும்"என்று அப்போது
சூளுரைத்தார் !