டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு பள்ளியில் படித்து வந்த 14 வயதுடைய ஒரு முஸ்லிம் மாணவன் அஹ்மத் முஹம்மத் ... இவன் தன் சொந்த முயற்சியில் வீட்டில் ஒரு கடிகாரத்தை செய்து அதை தனது வகுப்பு ஆசிரியர்களிடம் காட்ட ஆசிரியர் பயந்து போய் காவல் துறைக்கு தகவல் கொடுக்க உடனே போலீசும் அந்த மாணவன் அஹ்மத் முஸ்லிம் என்கிற ஒரே காரணத்தால் அவன் கண்டுபிடித்த கடிகாரத்தை சந்தேகப்படும் படியான தீவிரவாதபொருள் என தீர்மானித்து (?!) அங்கேயே கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற கொடுமை செயலை கண்டு உலகமெங்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது ...
இதனையறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ட்விட்டரில் மாணவன் அஹ்மத் முஹம்மதுக்கு ஆதரவாக கீழ்கண்டவாறு பதிவிட்டு வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்
'Cool clock, Ahmed. Want to bring it to the White House? We should inspire more kids like you to like science. It's what makes America great.'
அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் ...
இச்செய்தி பற்றிய முழு விபரமும் கீழ்காணும் இந்த லிங்கில் உள்ளது
#IStandWithAhmed என்ற பெயரில் ஹேஸ் டேக் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் கண்டனங்கள் குவிந்தது !.. பின்னர் எப்படியோ மாணவன் அஹ்மத் முஹம்மத் விடுதலை செய்யப்பட்டான் என்கிற செய்திகளை மீடியாக்களில் நான் படித்த போது என்மனதில் தோன்றியவை.......... " பாசிஸ சக்திகளின் உலகளாவிய மாபெரும் சதிகளாலும், சூழ்ச்சிகளாலும் உலக மக்களின் பொது புத்தியில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதத்தோடு அநியாயமாக இணைத்ததன் விளைவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முஸ்லிமும் தினம் தினம் அனுபவிக்கிறான் .. "
அவர்களும் சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
அல்குர்ஆன் 3:54
அல்குர்ஆன் 3:54
- தக்கலை கவுஸ் முஹம்மத்
Basheer Ina, Noor Mohamed, Zafar Rahmani, G Maluk Mohamed, Hm Shabeer, Abdul Kapur Mohamed NoohuAhadhu Sha
Basheer Ina, Noor Mohamed, Zafar Rahmani, G Maluk Mohamed, Hm Shabeer, Abdul Kapur Mohamed NoohuAhadhu Sha