விவசாயம் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா
வந்து என்ன பயன் என்று நண்பர்கள் பதிவிட்டு வருகிறார்கள். உங்கள் நினைப்பு நியாயம் தான்.
அதற்கு முன் டிஜிட்டல் இந்தியா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...
வந்து என்ன பயன் என்று நண்பர்கள் பதிவிட்டு வருகிறார்கள். உங்கள் நினைப்பு நியாயம் தான்.
அதற்கு முன் டிஜிட்டல் இந்தியா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...
சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70வருடமாகிவிட்டது. காங்கிரஸ் அரசு நாட்டை முன்னேற்றாமலே முடக்கி வைத்துள்ளது. உலக அரங்கில் நமது பாரதம் பல வருடங்கள் பின்தங்கியுள்ளது. இந்த அவலத்தை போக்க டிஜிட்டல் இந்தியா கட்டாயம் வேண்டும்.
விவசாயம் விவசாயம் என்று பல நாடகங்களை நடத்தி, விவசாயிகளின் தோழனாக இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கிடப்பில் போடவைத்து விட்டீர்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கிடப்பில் போட நினைத்து ஒட்டு மொத்த அங்கிகாரத்தையும் அபகரித்து விடாதீர்கள்.
பிலிம் ரோலில் புகைப்படம் எடுத்தகாலம் மறையேறிவிட்டது. பிலிம் ரோல் கேமராவிற்கும் நவீன டிஜிட்டல் கேமராவிற்க்கும் உள்ள வித்தியாசம் போல தான் இதுவும்.
ஏதோ ஒரு சிக்னலில் போக்குவரத்து காவல்துறையிடம் மாட்டிக்கொண்டீர்கள், கையில் லைசென்ஸ் இல்லை, இன்சுரன்ஸ் இல்லை.. ஆனால் அதன் நம்பர் இருக்கிறது.. அதை சொல்கிறிர்கள் உடனே காவல்துறை கையிலிருக்கும் ஐபேடில் அந்த எண்ணை செக் செய்கிறது சரியாக இருக்கிறது... இப்போது நீங்கள் செல்லலாம்.
உங்கள் காரில் நம்பர் பிளேட்டில் உள்ள ரகசிய டிஜிட்டல் குறியிடூ மூலம் உங்கள் கார் டோல்கேட் கடக்கும் போதே உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்துகொள்ளப்படும். (நீங்கள் விரும்பினால் இந்த வசதி).
இன்னும் தெளிவாக சொல்லபோனால். நீங்கள் ஆன் லைனில் ஒரு பொருள் வாங்க பதிவு செய்தவுடன்.. ஒவ்வொரு நிலைக்கும் ஒரு குறுந்தகவல் வருமல்லவா? அது போல் அரசு வெளிப்படையாக இயங்க தொடங்கும். நீங்கள் கொடுத்த புகார் எந்த நிலையில் இருக்கிறது என நீங்கள் எழுதி கேட்க வேண்டாம்...உங்களுக்கான தகவல்கள் எளிதாக உங்களிடம் வந்து சேரும் இதுதான் டிஜிட்டல் இந்தியா.
பல நாடுகள் இதை எப்போது செய்துவிட்டன. இந்தியாவில் மோடி ஆட்சியில் தான் பேசவே தொடங்குகிறது. நாளைகே இதெல்லாம் நடந்துவிடாது.. ஆனால் அதற்கான தொடக்கம்... அதற்குள் ஒரு குரூப்.. விவசாயம் காப்பாற்ற வேண்டாமா ? என பொங்குகிறது.