வீட்டில் மாட்டுக்கறி இருப்பதாக சந்தேகித்து முஸ்லிம் ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிட்டது. அவரது மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை மோடி தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் மாடல் என்றார் . அது கொலைகார மாடல் என்று புரியாமல் பலர் அப்பாவியாக இருந்துவிட்டனர். இப்போது அதன் கோரதாண்டவத்தை என்னசெய்வதென்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மாட்டுக்கறி தின்பது எப்போது மரணதண்டனைக்குரிய குற்றமானது? நாம் இப்படியே மௌனமாக இருந்தோமென்றால் இந்த மரணம் நம் வீட்டுக் கதவைத்தட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அப்போது இந்த ரத்தக்காட்டேறிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற யாருமே இருக்கமாட்டார்கள். அதுதான் வளர்ச்சி என்று நாம் நினைத்தால் மௌனமாக இருக்கலாம் . சுடுகாட்டில் !
கொல்லப்பட்டவரின் இன்னொரு மகன் விமானப்படையில் பணியாற்றுகிறார். நான் நாட்டைக் காப்பாற்றும் பணியில் இருக்கும்போது என் வீட்டைக் காப்பாற்ற யாருமில்லையே என்று அவர் கேட்டால் சொல்வதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா ?!
thanks Jothimani Sennimalai