சனி, 16 ஜனவரி, 2016

திமுகவுடன் கூட்டணி – முஸ்லிக் லீக்குக்கு 20 சீட்டு

திமுகவுடன் கூட்டணி தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று காதர் மொகிதீன் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன் கூறியதாவது:IUML__Leaders_met__2689957f
தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் பள்ளிவாசல்களை உள்ளடக்கிய மஹல்லா ஜமாத்களின் மாநாடு வரும் மார்ச் 10-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தோம். முடிந்தால் தான் வருவதாகவும், இல்லையெனில் பொருளாளர் மு.க.ஸ்டாலினை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கிறது. வரும் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக தலைமையில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம். ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் எங்களின் கோரிக்கையை ஏற்று திமுக கூட்டணியில் முஸ்லிம் சமுதாயத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்துக்கு குறைந்தது 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். வரும் 20-ம் தேதி முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வோம்.” என்று காதர் மொகிதீன் கூறினார்.
ஆனால் தற்போது முஸ்லிம்களின் வாக்கு எண்ணிக்கைக்கும் திமுகவின் தள்ளாடும் நிலைமைக்கும் முஸ்லிம் லீக்குக்கு 20 சீட்டு கொடுக்கலாம்.

Related Posts: