திங்கள், 4 ஜனவரி, 2016

பித்­தப்­பையில் கற்கள்

பித்­தப்­பையில் கற்கள் இருந்தால் உடனே அதனை அகற்­றி­விட வேண்டும். சிறு­நீ­ர­கத்தில் கற்கள் ஏற்­பட்டால் எத்­த­கைய பாதிப்பு ஏற் படுமோ அத்­த­கைய பாதிப்பை இது உரு­வாக்­காது என்­றாலும், இதனை அலட்­சி­யப்­ப­டுத்­தினால் மஞ்சள் காமாலை வரக்­கூடும். எனவே பித்தப் பையில் கல் இருந்தால் உடனே அதனை பரி­சோ­தித்துக் கொண்டு, அதற்­கு­ரிய சிகிச்­சை­களை மேற் கொள்ள வேண்டும்.
பித்­தப்பை கற்கள், பித்­தப்­பையில் எங்கு செல்­கி­றதோ அந்த பகு­தியில் அடைப்பை உரு­வாக்கும். அங்­கிருந் துக் கொண்டு நோய் தொற்றை உரு­வாக்கும். பித்­தப்­பை­யி­லி­ருந்து பித்த நீர் வெளி­யேறும் இடத்தில் அடைப்பு ஏற்­பட்­டி­ருக்­கு­மே­யானால், நோயா­ளிக்கு மஞ்சள் காமாலை நோய் வரு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூறு அதிகம்.
அதே சம­யத்தில் கற்­களின் பக்­க­வாட்டு மற்றும் நுண்­ணிய இடங்­களில் எல்லாம் தீமை தரும் பாக்­டீ­ரி­யாக்கள் உரு­வா­கி­விடும். இதனால் பித்த நாளங்­களில் திரும்ப திரும்ப நோய் தொற்று ஏற்­பட்­டுக்­கொண்­டே­யி­ருக்கும். இதனை மருத்­து­வத்­து­றை­யினர் ரெக்கண்ட் கோலான்­ஜைடீஸ் என்று குறிப்­பி­டு­வார்கள். இதற்கு தனி­யாக சிகிச்சை மேற்­கொள்­ள­வேண்டும்.
பித்­தக்­கற்­களால் ஏற்­பட்ட அடைப் பால் பித்த நீர் பித்த நாளங்கள் வழி­யாகச் சென்று குரு­தியில் கலக்க முடி­யாமல் போகி­றது. இது தொட­ரு­மே­யானால் அவர்­க­ளுக்கு அபஸ்ட்­ரக்டிவ் டைப் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்­படும். இவை தானாக சரி­யா­காது. மருந்­து­க­ளாலும் கட்­டுப்­ப­டுத்த இய­லாது. இதற்கு கார ணமான பித்­தக்­கற்­களால் ஏற்­பட்ட அடைப்பை முழு­வ­து­மாக நீக்க வேண்டும். அப்­போது தான் குண மாகும்.
வேறு சில­ருக்கு பித்தக் குழாயி லிருந்து பித்­தநீர் சிறு­கு­ட­லுடன் சேரு­மி­டத்தில் பெரிய அள­வி­லான பித்தக் கற்கள் உரு­வாகி அடைப்பு ஏற்­பட்­டி­ருக்கும். இதற்கு கால் ஸ்டோன் இலியஸ் என்று மருத்­துவத் துறை­யினர் குறிப்­பி­டு­கின்­றனர்.
இதற்கும் மருந்து மற்றும் மாத்­தி­ரை­களால் கட்­டுப்­ப­டுத்த இய­லாது. பித்­தக்­கற்­களின் அடைப்பை முழு­வ­து­மாக சத்­திர சிகிச்சை செய்து அகற்­றினால் தான் குண­மாகும். இதே போல் வேறு சில­ருக்கு பித்த நாளங்­க­ளிலும், ஈரலி லும், சிறு­கு­ட­லிலும் பாதிப்­புகள் ஏற்­ப­டக்­கூடும். அதனை உரிய காலத்தில் பரி­சோ­தித்து சிகிச்­சைகள் மேற்­கொள்­ள­வேண்டும்.
மேலும் சில­ருக்கு மட்டும் பித்­தப்­பையின் சுவரில் பாலிப் எனப்­படும் குடல் நீட்­சி­களின் வளர்ச்சி அதி­க­மாக காணப்­படும். இதனை தொடக்க நிலை­யி­லேயே கண்­ட­றிந்து சத்­திர சிகிச்சை மூலம் அதனை அகற்­றி­வி­ட­வேண்டும். ஏனெனில் இந்த நீட்­சி­யா­னது வளர்ந்து புற்­று­நோ­யாக மாறக்­கூ­டிய அபாயம் உண்டு.
பித்­தப்­பையின் சுவர் முழு­வ­திலும் ஒரு மெல்­லிய கால்­சியம் படிந்த மடிப்பு உரு­வாகும். இதை மருத்­துவத் துறை­யினர் போர்­ஸி­லியன் கால் பிளேடர் (Porcelain Gallbladder) என்று குறிப்­பி­டு­வார்கள். இந்த மடிப்பு உரு வாகி­யி­ருப்­பது பரி­சோ­த­னையின் போது உறு­தி­யானால் உடனே பித்­தப்­பையை நீக்­கி­வி­ட­வேண்டும். இல்­லை­யெனில் இது புற்­று­நோ­யாக மாறக்­கூ­டிய ஆபத்து அதிகம் உண்டு.
ஒரு சில­ருக்கு புற்று நோயாக மாற­வில்­லை­யெனில் தீவி­ர­மான நோய் தொற்று ஏற்­பட்டு அபாய கட்­டத்­திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உண்டு.
இந்த மாதி­ரி­யான தரு­ணங்­களில் மருத்­து­வர்கள் பித்­தப்­பையை அகற்றி விடு­மாறு பரிந்­து­ரைப்­பார்கள். ஏன் வலி­யு­றுத்­தக்­கூட செய்­வார்கள். ஆனால் எமக்கு பித்­தப்­பையை அகற்றி விட்டால் செரி­மானம் நடை பெறு­வதில் ஏதேனும் பின்­வி­ளைவு ஏற்­பட்­டு­வி­டுமோ என அஞ்­சுவோம். இந்த பயம் தேவை யற்­றது.
ஏனெனில் செரி­மா­னத்­திற்கு உதவும் பித்த நீரை கல்­லீரல் தான் சுரக்­கி­றது. சுரக்கும் பித்த நீரை 30 சி சி முதல் 40 சிசி வரை தான் பித்­தப்பை சேமித்து வைத்துக் கொள்­கி­றது. இதனால் தேவைக்கு அதி­க­மாக 30 சி சி முதல் 40 சி சி வரை சேமிக்­கப்­படும் பித்­தப்­பையை நீக்­கு­வதால் ஜீரண மண்­ட­லத்­திற்கு எத்­த­கைய பாதிப்பும் ஏற்­ப­ட­போ­வ­தில்லை. இது பல முறை ஆய்­வுகள் மூலம் நிரூ பிக்­கப்­பட்­டுள்­ளது.
இயல்­பாக விரிந்து சுருங்க முடி­யாத பித்தப் பையில் தான் பித்தக் கற்கள் தோன்­று­கின்­றன. அதனால் சரி­யாக பணி­யாற்­றாத நிலையில் இருக்கும் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக் கவே சுரக்காது. வேலை செய்யாத பழுதுபட்ட பித்தப்பையினால் ஜீரணத்திற்கு எந்த பயனும் இல்லை. அதினால் எதிர்மறையான பாதிப்பு தான் அதிகம். இதனால் பித்தப்பையை வைத்துக்கொள்வதை விட சத்திர சிகிச்சை மூலம் அகற்றிவிடுவதே சிறந்தது.