திங்கள், 4 ஜனவரி, 2016

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : முஸ்லிம் அல்லாதவர் கைது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முஸ்லிம் அல்லாதவர் கைது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு போலீஸ் நிலையத்தில் உள்ள தொலைபேசிக்கு கடந்த 31–ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் சபரிமலை கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
unnamed

உடனே கோவிலில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீஸ்நிலையத்திற்கு அழைப்பு வந்த செல்போன் எண் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் எண் தமிழ்நாட்டில் உள்ள சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது.

உடனே பீர்மேடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜோபின்ஜார்ஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அந்த செல்போனை வைத்திருந்த சுப்பையா (வயது 58) என்பவரை கைது செய்தனர். இவர் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் RSS பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரா என்று காவல்துறை சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில் குற்றவாளியே வாக்குமூலம் குடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
unnamed (1)


வாக்குமூலம் 
போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
நான் சபரிமலைகோவிலுக்கு குழுவாக வந்தேன். அப்பாச்சி மேடு பகுதியில் வைத்து என்னை தனியாக விட்டு விட்டு என்னுடன் வந்தவர்கள் சென்றனர். இதனால் எனக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. எனவே கோபத்தில் சபரிமலையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சுப்பையாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்