சனி, 2 ஜனவரி, 2016

ஏர்வாடி காஜா படுகொலை சம்பவத்தை மறக்கடிக்க பா.ஜ.க வின் அடுத்த கட்ட சதிசெயல் : ஆரம்பம்

வாணியம்பாடி, ஜன.2–
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது60). பா.ஜனதா கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், அறநிலைய பிரிவின் மாநில துணை தலைவராகவும் உள்ளார்.
unnamed (2)
சிவப்பிரகாசம் கட்சி பணிக்காக வாணியம்பாடி நியூடவுன் பாளையம் கோவில் தெருவில் நேற்று காலை நடந்து சென்றார்.
அப்போது 2 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் உருட்டு கட்டை மற்றும் கற்களால் சிவப்பிரகாசத்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையறிந்த பா.ஜனதா கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் ஊர்வலமாக பஸ் நிலையத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவப்பிரகாசம் தாக்கப்பட்டதை அறிந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வாணியம்பாடிக்கு விரைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிவப்பிரகாசத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்திற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்தார்.
சிவப்பிரகாசத்தை தாக்கிய மர்ம கும்பலை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வாணியம்பாடி, ஆம்பூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறிவித்தனர்.
அதன்படி வாணியம்பாடி பகுதியில் சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, பஸ் நிலையம், பூக்கடை பஜார், முகம்மது அலி பஜார் பல்வேறு பகுதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கடைகள் இன்று அடைக்கப்பட்டன. அதேபோல் ஆம்பூரில் பஜார் பகுதி, மார்க்கெட், பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் பெரும்பாலான கடைகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அடைக்கப்பட்டன.
இதனால் பஜார் பகுதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்– ஆட்டோ போக்குவரத்துக்கு எந்த தடங்கலும் இல்லை. அவை வழக்கம் போல் இயங்கியது.
unnamed (1)
பா.ஜனதா பிரமுகர் தாக்கப்பட்டதை தொடர்ந்து வாணியம்பாடி– ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோதல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் வாணியம்பாடிக்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா நிருபர்களிடம் கூறுகையில், ‘வாணியம்பாடியில் பா.ஜ.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும். கடையடைப்பு போராட்டத்துக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாணியம்பாடியில் பா.ஜனதா பிரமுகர் சிவப்பிரகாசம் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பதற்றத்தை தணிக்க குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதன்படி சிவப்பிரகாசம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
என்ன வேகம் என்ன வேகம்
 இப்படி இவர்கள் செய்வதனால் ஏர்வாடி காஜா மொய்தீனை படுகொலை செய்ததை மறக்கடிக்க இந்த சுழ்சியோ? அடித்தது முஸ்லிம்கள் தான் என்று சொன்னாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.