எந்த தவறும் செய்யவில்லை பத்து ஆண்டுகள் சிறையிலேயே
வாழ்க்கை அவர்களுக்கு முறையான உணவு இல்லை உடுத்த உடை இல்லை
நான்கு சுவற்றை பார்த்து பார்த்து அவர்களையே நியாபகப்படுத்த முடியாமல் செத்து போன மூளை
இஸ்லாமியனாக பிறந்தது தவறா?
நீதி கிடைக்காமல் நியாயம் கிடைக்காமல் பெற்ற குழந்தைகளை காண முடியாமல்
சிறையிலேயே செத்து மடியும் சிறை வாசிகளை விடுதலை செய் எங்கள் வாக்குகள் உனக்கு நிச்சயம் விழும்
நீங்கள் கொடுக்கும் இலவச பொருட்கள் வேண்டாம்
பாதி வாழ்க்கையை சிறையில் வாழ்ந்த சிறைவாசிகளுக்கு மீதி வாழ்க்கையை குடும்பத்தோடு வாழ அனுமதி கொடு.