நாளுக்கு நாள் மரமாக மாறும் இளைஞன்: விரைவாக வளரும் கிளைகளை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை
பங்களாதேஷின் குல்னா பகுதியில் வாழும் இளைஞர் ஒருவர் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மரமாக மாறி வருகிறார்.
25 வயதான அபுல் பஜந்தர் என்ற இளைஞனுக்கு விசித்திரமான நோய் தாக்கியுள்ளது.இதன் காரணமாக அவரது கை, கால்கள் மரத்தில் உள்ள பட்டை போல நாளுக்கு நாள் உருமாறி வருகிறது. இந்த நிலைமை காரணமாக அவரால் எழுந்து நடக்கவோ தனக்கு தேவையான காரியங்களை செய்யவோ முடியாமல் தவித்து வருகிறார்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் படிப்படியான அறுவை சிகிச்சை மூலமாகவே இவரது நோயை குணப்படுத்த முடியும் என்பதால் குறைந்தது 6 மாத காலத்தின் பின்னரே அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவித்துள்ளனர்.