சீனாவை ஒட்டியுள்ள தெற்கு சீனக் கடலில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது ஏன்? கடல் பகுதியை ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா விரும்புவது ஏன்? இதை ஏன் சர்வதேசப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை தெளிவாக பார்க்கலாம்...

சீனாவுக்கு தெற்கே மலாக்கா நீரிணையில் இருந்து தைவான் வரை சுமார் 35 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்திருக்கிறது தெற்கு சீனக் கடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தக் கடலும் அதில் உள்ள தீவுகளுக்கும் தங்களுக்குச் சொந்தமாக இருந்து வருவதாக சீனா கூறி வருகிறது.
ஆனால், இந்தக் கடலைச் சுற்றியிருக்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான், கம்போடியா உள்ளிட்ட நாடுகள், இதில் தங்களுக்கும் உரிமை இருப்பதாகக் கூறுகின்றன.
இந்தக் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் புதைந்து கிடப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த இயற்கை வளங்களுக்காகவே சீனாவும் பிற நாடுகளும் இந்தக் கடல் பரப்பில் உரிமை கோரி வருவதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் எதிர்ப்பு காரணமாகவே வியட்நாமுடன் செய்து கொண்ட எண்ணெய் எடுக்கும் உடன்பாட்டை இந்தியா ரத்து செய்து வேண்டியதாயிற்று. இயற்கை வளங்கள் தவிர இரு முக்கியமான தீவுக்கூட்டங்களும் இங்கு உள்ளன.
இந்தத் தீவுக் கூட்டங்களில் பெரும்பாலானவை மனிதர்கள் வாழ இயலாதவை. இருப்பினும் மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இந்தத் தீவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தெற்கு சீனக் கடலைப் பொறுத்தவரை, மலாக்க நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான பாதையாக இருப்பதால், இதை சர்வதேசக் கடல் வழியாகக் கருத வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்னையை சர்வதேசத் தளத்துக்குக் கொண்டு செல்வதற்குக்கூட சீனா விரும்பவில்லை.