இந்த நாட்டுல குதிரை கால உடைச்ச எம்எல்ஏ மேல கூட நடவடிக்கை எடுக்குறாங்க சார்.
ஆனா என் வீட்டுக்காரர் கால உடைச்சி முறிச்சி போட்டுட்டு, 1005ரூபாய்லருந்து, 5ஆயிரம் ரூபாய் வரைக்கும பேரம் பேசுறாங்க சார் போலீஸ்காரங்க… நீ டிமாண்ட் பண்ணுமா.. டிமாண்ட் பண்ணு. எவ்வளவு வேணா கேளு,. இந்த வெள்ளைப்பேப்பர்ல கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிக்கன்னு என் வீட்டுக்கு தினந்தோறும் வர்றாங்க சார்.. இனிமே என் உயிரே போனாலும் சரி நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். குடும்பத்தோட மண்ணெண்ணெய ஊத்தி தற்கொலை பண்ணிக்குவேன்னு சொன்ன பிறகுதான் என் வீட்டை விட்டு போனாங்க.
---------------------
“ ஏம்மா தமிழ்நாட்டு அரசோட மோதுற”
---------------------
“ ஏம்மா தமிழ்நாட்டு அரசோட மோதுற”
“ ஏண்டா இன்னும் இங்க இருக்கீங்க நாய்ங்களா…? இலங்கைக்கு போய் தொலைய வேண்டியதான..? போட்டத தின்னுட்டு பேசாம இருக்க முடியாதா..?
“ எங்க நாடு...... எங்க மக்கள்.. எப்படி வேணுன்னா காட்சிகளை மாத்திப்போம். குடுக்கற பணத்தை வாங்கிக்கோ”
-----------------------------------
- கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் சுபேந்திரன்; அவருக்கும், முகாம் தலைவருக்கும் நடந்த ஒரு பிரச்சனைக்காக விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு காவல்துறையினர் அவரின் கால் உடையும் வரை அடித்து உதைத்ததோடு நில்லாமல், தங்களை காவலதிகாரிகள் கீழ்த்தரமாக பேசியதை கண்ணில் நீர் பொங்க நம்மிடம் விவரிக்கிறார் அவரின் மனைவு தர்ஷினி.
- தர்ஷினி சொல்வதை கேட்க நமக்கு மிகுந்த மனதிடம் வேண்டும். பேசத் தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரைக்கும் விடாத அழுகை. கால் உடைந்து கிடக்கும் கணவனை பார்த்துக் கொள்ளவேண்டும், அவரின் மருத்துவச் செலவுகள், இரு குழந்தைகளின் படிப்புச் செலவுகள்……………… எதிர்காலமே சூன்யமாகி போனதை நினைத்து நினைத்து அழுதுகொண்டே அனைத்தையும் பேசுகிறார்.
- போக எந்த உரிமையும், மதிப்புமற்ற அகதி வாழ்க்கை… அதை சொல்லி சொல்லி தங்களை கீழ்த்தரமாக நடத்திய காவல்துறையின் அத்துமீறல் என தர்ஷினியின் தற்போதைய வாழ்க்கை அவநம்பிக்கைகளால் சூழ்ந்துள்ளது. மனித உரிமை ஆணையம், மறுவாழ்வுத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்திலும் புகார் செய்யப்பட்டு நடந்த தவறுக்கு காரணமாக காவலதிகாரி டில்லிபாபு மீது தக்க நடவடிக்கையை கோருகிறார்.
- இதைப்பற்றி பேசுகிறது இன்றைய ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி
நிகழ்ச்சி நேரம்: சனிக்கிழமை மாலை 5.30 – 6.00 மணி வரைக்கும் (09/04/2016ஸ்ரீ
மறு ஒளிபரப்பு: ஞாயிற்றுக்கிழமை இரவு – 8:30 - 9:00மணி வரைக்கும்…
நிகழ்ச்சி நேரம்: சனிக்கிழமை மாலை 5.30 – 6.00 மணி வரைக்கும் (09/04/2016ஸ்ரீ
மறு ஒளிபரப்பு: ஞாயிற்றுக்கிழமை இரவு – 8:30 - 9:00மணி வரைக்கும்…
-------------------------------------------
“ முகாம் தலைவருக்கும், என் வீட்டுக்காரருக்கும் தகராறு இருந்தது. அதை விசாரிக்கத்தான் இவரை கூட்டிட்டு போனாங்க. இங்கருந்து வண்டில ஏத்தும்போது அடிச்சிதான் ஏத்திருக்காங்க. அப்புறம் நானு, எங்கம்மா, இன்னொருத்தங்கன்னு மூணு பொம்பளைங்க சேர்ந்து ஸ்டேஷனுக்கு போனோம். அங்க நுழையறேன்… ஒரு போலீஸ்காரர் பூட்ஸ் காலாலேய என் வீட்டுக்காரர் நெஞ்சு உதைக்குறத பார்த்தேன். அவரோட கால் ரெண்டும் திரும்பி இருந்துச்சி. ஏன் சார் இப்படி பண்றீங்கன்னு கதறியழுதுகிட்டே அவர்கிட்ட ஓடினோம். என்னோட வந்தவங்க கொஞ்சம் அழுத்தமா கேட்டதும் போலீஸ்காரர் நெஞ்சை நிமித்துட்ட எங்கள அடிக்க வந்தாங்க.

நாங்க அழுது முடிக்கிறதுக்குள்ள ஒரு ஆட்டோவ புடிச்சி, கையில காசும் கொடுத்தும் தூக்கிட்டு போம்மா இல்லன்னா கேஸ் போட்ருவோன்னாங்க. நான் தூக்கிட்டு போவே மாட்டேன், இந்த நிலையில இவர வச்சி நான் எப்படி பாக்குறது..இதுக்கு நீங்க கொன்னே போட்டுருக்கலாமேன்னு அழுதுட்டே அவர தூக்கிட்டு.. கோட்டக்கரை ஹாஸ்பிடலுக்கு போனோம். அப்புறம் ஸ்டான்லிக்கு போனோம்.”
இப்பவரைக்கும் படுத்த படுக்கைதான். படுக்கையிலதான் எல்லாமே. சாப்படுறதுலருந்து, பாத்ரூம் போற வரைக்கும் ஒரே இடத்துலதான்.. இரண்டு குழந்தைங்க இருக்கு. படிக்குது…” என பொங்கியழுகிறார் தர்ஷினி.
“அது இல்லாம நெஞ்சுல வேற எட்டி உதைச்சி, தரக்குறைவா பேசி “ஏண்டா இங்க இருக்கீங்க நாய்ங்களா…? இலங்கைக்கு போய் தொலைய வேண்டியதான..? போட்டத தின்னுட்டு இருக்க முடியாதா..?ன்னு எங்களை கீழ்த்தரமா பேசுனாங்க சார்.
நான் இங்க வரும்போது 5வயசுதான். இங்க வந்து தங்கவே கூடாதுன்னுதான் சார் வந்தோம். இவருக்கு எப்ப கால் சரியாகும்.. திரும்ப போகலான்னு நினைச்சிட்டிருக்கோம். இந்த மாதிரி கொடுமைய நாங்க பாத்தது கூட இல்ல சார். சிங்களவன் கொடுமை பண்றான் கொடுமை பண்றான்னாங்க.. எனக்கு தெரியாது. அம்மா அப்பா சொல்லுவாங்க. ஆனா இது கண்ணு முன்னாடி துடிக்க துடிக்க நாய போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சதும் இல்லாம, ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு வந்து பேரம் பேசுறாங்க சார்.

வெள்ளைத்தாள்ல சைன் போடுங்கன்னு 1005ரூபாய்லருந்து பேரம் பேசுறாங்க சார்.
“இந்த நாட்டுல குதிரை கால உடைச்ச எம்எல்ஏ மேல கூட நடவடிக்கை எடுக்குறாங்க சார். ஆனா எம்புருஷன் கால உடைச்சி முறிச்சி போட்டுட்டு, 1005ரூபாய்லருந்து, 5ஆயிரம் ரூபாய் வரைக்கும பேரம் பேசுறாங்க சார் போலீஸ்காரங்க… நீ டிமாண்ட் பண்ணுமா.. டிமாண்ட் பண்ணு. எவ்வளவு வேணா கேளு,. இந்த வெள்ளைப்பேப்பர்ல கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிக்கன்னு என் வீட்டுக்கு தினந்தோறும் வர்றாங்க சார்.. இனிமே என் உயிரே போனாலும் சரி நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். குடும்பத்தோட மண்ணெண்ணெய ஊத்தி தற்கொலை பண்ணிக்குவேன்னு சொன்ன பிறகுதான் என் வீட்டை விட்டு போனாங்க.”

“ இன்னிக்கு எங்க வீட்டுல அடுத்தவேளை சாப்பாடு கூட கஷ்டம். ரேஷன் அரிசிதான். இதுல அவருக்கு கால் கட்டு போடணும்.இதுவரைக்கு 5கால் கட்டு போட்டும் பொருந்தலன்னு சொல்றாங்க. படுக்கையில வச்சிட்டு ஒரு ஆம்பளளைய பாக்கமுடியாது… அந்த டில்லிபாபு சார் மேல நடவடிக்கை எடுக்கணும். இனிமே முகாம்ல உள்ள எந்த தமிழர்களையும் துன்புறுத்த கூடாது.
அவங்கள அடிக்கறதுக்கே யோசிக்கணும் சார்”
அவங்கள அடிக்கறதுக்கே யோசிக்கணும் சார்”
“ நாய அடிக்கிற மாதிரி அடிச்சி போட்டுட்டு போன் நம்பர் குடுத்து பேசச்சொல்றாரு சார். நாங்க என்ன அவ்வளவு கேவலமா போயிட்டோமா.? நாங்க என்ன சார் செஞ்சோம். நாங்க செஞ்ச முத தப்பே இந்தியாவுக்கு வந்ததுதான். தமிழனா பொறந்ததுதான். வேற எந்த தப்பும் செய்யல. அவ்வளவு கேவலமா நடத்துறாங்க சார்.
“ நாங்க ஏதாவது ஒரு பிரச்சனைக்கு போலீசுக்கு போனா ஏம்மா தமிழ்நாட்டு அரசோட மோதுறியான்னு கேக்குறாங்க.. நாங்க அவ்வளவு பெரிய ஆட்கள்லாதம் இல்ல. போட்ட பிச்சைய சாப்பிட்டு பேசாம இருக்கோம். தமிழ்நாட்டு கவர்ன்மெண்ட்க்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல சார். டில்லி பாபு சார், அந்த 3 போலீஸ்காரங்க மேல நடவடிக்கை எடுக்கணுன்னுதான் கேக்குறோம்.
ஒரு குற்றமே செஞ்சாலும் புடிச்சி ஜெயில்ல போடுங்க… இப்படியா அடிச்சி முறிச்சி போடுறது..? அடிச்சி முறிச்சி போட்டுட்டு தினம வீட்டு வாசலுக்கு வந்து நிக்குறீங்க..? யார்கிட்டயும் பேசக்கூடாதுன்னு சொல்றீங்க.. என்ன மனுஷங்களோ தெரியல..எங்கள எங்க நாட்டுக்கு அனுப்பிடுங்க. சிங்களவன்கிட்ட கூட வாழ்ந்துடுவோம். தமிழனுக்கு தமிழன் இப்படி எதிரியாவே இருக்கக்கூடாது.. பிச்சைப்போடுற மாதிரி. ஒருத்தரும் வந்து எட்டிபாக்கல சார் இதுவரைக்கும். வேல்முருகன் அய்யாதான் 25ஆயிரம் ரூபாய் கொடுத்தாரு. வேற யாரும் வந்து எட்டிபாக்கல. எல்லா இடத்துலயும் புகார் கொடுத்தோம். யாரும் வரல.”
இனி இவர் எப்ப எந்திரிச்சி எப்ப நடக்குறது? ரெண்டு புள்ளங்க படிக்குது சார். என்னோட எதிர்காலம், பிள்ளைகளோட எதிர்காலம் எல்லாமே சூனியமா வாழ்றதுக்கு நாங்க செத்து போயிடலாம் சார். உண்மையில மனசொடிஞ்சி போய் இருக்கோம், “எங்க நாடு எங்க மக்கள்.. எப்படி வேணுன்னா காட்சிகளை மாத்திப்போம். குடுக்கற பணத்தை வாங்கிக்கோ”ன்னு பேரம் பேசுறாங்க. உயிரே போனாலும் எப்படி சார் ஒத்துக்குவேன்?
“ என் வீட்டுக்காரர் பெயிண்டிங்க வேலை பாத்தாரு. நாளுக்கு 600ரூபாய் எடுத்துட்டு வருவாரு. ஒரு நாள் கூட லீவு போடாம எங்கள பாத்துக்கிட்டாரு. இப்போ ஒரு மாசமா இந்த படுக்கையிலதான் எல்லாமே. நானும் நோயாளி. என்னாலயும் வேலைக்கு போகமுடியாது. “
எங்கள பாத்து நாடகம் ஆடுறீங்களான்னு கேக்குறாங்க சார்…? நைட்டு எட்டு மணிக்கு வந்த எங்கிட்ட பேரம் பேசுறாங்க. நார்மலா ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்தா எட்டி பாக்கதவங்க என் வீட்டுக்கு ஏன் சார் எட்டு மணிக்கு வர்றாங்க..? ஆனா தண்ணியிடிச்சிட்டே வந்து பேசுவாங்க. ஒரு லேடிஸ்கிடட் எப்படி பேசணுன்னு வரைமுறை தெரியாம பேசுறவங்க…

இவ்வளவு கொடுமை செஞ்சிட்டு எங்கயும் போய் பேசக்கூடாது, பாக்கக்கூடாதுன்னு.. இனிமே என் உயிரே போனாலும் பரவால்ல. இனிமே அடிக்கிறப்ப யோசிக்கணும். மனுஷனா.. மிருகமா? கால்ல ஏறி, நெஞ்சுல உதைச்சி.. கேட்டா நீதான் வாயாடி பொண்ணுன்’னு என்னை திட்டுறாங்க. நடந்த கொடுமைய சொன்னா வாயாடின்றங்க.. அந்த டில்லிபாபு சார் மேல நடவடிக்கை எடுக்கணும். அவ்வளவுதான்.