சனி, 16 ஏப்ரல், 2016

உண்ணும் இறைச்சியில் நுண்ணுயிர் கொல்லிகள்: பரவும் அபாயம்

Drugs fb

உலகின் முன்னணி துரித உணவகங்கள், பப்புகள், மற்றும் ரெஸ்ட்ராண்ட்-கள் நுண்ணுயிர் கொல்லிகள் கொடுத்து வளர்க்கப்படும் கோழி மற்றும் இதர இறைச்சி வகைகளை மக்களுக்கு உணவாக வழங்கக்கூடாது என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
மெக்டொனால்டுஸ், டோமினோஸ், பர்கர் சிங், ஜே.டி வெதர்ஸ்பூன், ஆகிய பிரபல உணவு நிறுவனங்களுக்கு நுண்ணுயிர் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளை குறைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நுண்ணுயிர் கொல்லிகள் உள்ள இறைச்சியை மனிதர்கள் உண்பதால், அவர்கள் நோய்வாய் பட்ட சமயத்தில் கொடுக்கப்படும் நோய் எதிர்பு மருந்துகள் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்த தவறுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து குணப்படுத்த முடியாத அளவிற்கு மிக மோசமான நோய்கள் வருகின்றன.
நாளுக்கு நாள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாம் உண்ணும் உணவிற்கும் உள்ள தொடர்பை பற்றி பொதுமக்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். இதனால் மிகப்பெரிய உணவு நிறுவனங்கள் அனைத்தும் நுண்ணுயிர் கொல்லிகள் கொடுத்து வளர்க்கப்படும் பிராணிகளின் இறைச்சிகளை பயன்படுத்துவதால் பெயர் கெட்டு விடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர்.
பல அறிவியல் அறிஞர்கள் மனிதனுக்கு கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயல் இழந்து போவதற்கு, நுண்ணுயிர் கொல்லிகள் கொடுத்து வளர்க்ப்படும் பிராணிகளின் இறைச்சியே மனிதன் உண்பதே காரணம் என கருதுகின்றனர்.
இதைப்பற்றி உலக சுகாதார அமைப்பு கூறும்போது, இது மிகப்பெரிய வளர்ந்து வரும் பிரச்னை என்றும் இதனால் பல குணப்படுத்த முடியாத நோய்கள் விரைவில் மனிதனுக்கு ஏற்படலாம் எனவும் கூறியுள்ளது.
ஐரோப்பா யூனியனில் வருடந்தோறும், 25,000பேர் இவ்வாறு நோய் எதிர்ப்பு மருந்துகளை செயலிழக்கச் செய்யும் நோய்கள் மூலம் இறக்கின்றனர்.
நுண்ணுயிர் கொல்லிகளை பயன்படுத்தி வளர்க்ப்படும் பிராணிகளின் இறைச்சியை உணவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்னையை சரிசெய்யலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் உணவுகளை நுண்ணுயிர் கொல்லிகள் இல்லாத உணவுகள் என தரப்பிரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Posts: