ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில் அது உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என வளர்ந்த நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர்கள் ஏற்கனவே உலகபொருளாதாரம் பல்வேறு பாதிப்புக்களால் மந்தமாக உள்ள நிலையில் பிரிட்டன் வெளியேற்றம் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து பிரிட்டன் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மக்களிடம் வரும் ஜூன் 23ம் தேதி வாக்கெடுப்பையும் நடத்த உள்ளது. இதனிடையே, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறாமல் தடுப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த வாரம் அங்கு செல்ல உள்ளார்