களக்காடு அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேலவடகரை, கீழவடகரை விவசாய தோட்டங்களில் புலியின் நடமாட்டம் இருப்பதை விவசாயிகள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நெடுவிலை பகுதியில் ஆடு மேய்த்துகொண்டிருந்த தங்கதுரை என்பவரின் ஆட்டை புலி அடித்து தூக்கி சென்றதை அடுத்து விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.