சனி, 2 ஏப்ரல், 2016

முஸ்லிம்களின் தலாக் முறைக்கு தடை?


பு துடில்லி:முஸ்லிம்களின் தலாக், பலதார மணம் போன்றவற்றை எதிர்த்து, உத்தரகண்டை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இது சம்பந்தமாக ஏற்கனவே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது. காங்., தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் அமைக்கப்பட்ட அந்த குழு, 2015ல் தன் அறிக்கையை, அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மூன்று முறை, ‘தலாக்’ கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு ஏற்ப, முஸ்லிம்கள் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும் வகையிலும் சட்டப் பிரிவு களை சேர்க்க வேண்டும். விவாகரத்துக்குப் பின், மனைவி, குழந்தை களுக்கு ஜீவனாம்சம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும்