உங்க மனசாட்சிப்படி சொல்லுங்க 2G அப்டின்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா? எனக்குத் தெரிஞ்சத நான் சொல்லுறேன்.இப்பவாவது காதுகொடுத்து கேளுங்க ப்ளீஸ். ஆ.இராசா அமைச்சராக இருந்தபோது 2G அலைக்கற்றை(spec trum) 52.7 MHz(mega hertz) அளவுக்கு விற்கப்பட்டது. ஒரு MHz - ரூ.267.5 கோடிக்கு விற்பனை ஆனது. ஆக! 52.7MHz x 267.5 கோடி= ரூ.14.98 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆனது. அப்போது தலைமை தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் தனது அறிக்கை மூலம் ஒரு கேள்வி எழுப்பினார். ஒரு MHzஐ ரூ.3350 கோடிக்கு விற்றிருந்தால் (52.7xரூ.3350 கோடி) 1.76 லட்சம் கோடி அரசு வருமானம் ஈட்டியிருக்குமே என்றார். அதாவது 176545 கோடி. குத்துமதிப்பாக 170000 கோடி(zero போட்டுக்கோங்க). ஏன் குறைச்சு வித்தீங்க? என்றார். ஆக! வருமானத்தில் இழப்பை ஏற்படித்தியதுதான் வழக்கு. அந்த 170000 கோடி என்பது பணமாக ஆ.இராசா வீட்டிலோ, திமுக அலுவலகத்திலோ எங்கும் எடுக்கப்படவில்லை. இதுவரை அந்த தொகையின் எந்த பகுதியும் எங்கும் இல்லை.ஆவணமும் இல்லை. உதாரணத்திற்கு ப்ளாட்பார கடை இட்லி ரூ.5/-. சரவணபவன் இட்லி ரூ.32/-. ப்ளாட்பார ஆயா ஏன் ஒரு இட்லி ரூ.32க்கு விக்கக்கூடாது என்பதே வினோத்ராயின் கேள்வி. சாமான்யனுக்கு ப்ளாட்பார விலைதான் முடியும் என்பது அரசு கொள்கை(அம்மா உணவகக் கொள்கையும் அதுதாம்). அதுக்காக ரூ.1க்கு இட்லி வித்து இழப்பு ஏற்படுத்திய ஜெயாவை கைதா பண்ண முடியும். இப்போது புரிந்ததா 2G இழப்பு வழக்கு பற்றி. அதான் சுபவீ போன்ற படித்தவர்கள் அதை ஊழலே இல்லை என்கிறார்கள்.உத்தேச இழப்பு என்று செல்கிறார்கள். படிக்காத தற்குறிகள் இதை படித்தும் நமக்கேன் brilliance தேவையில்லாமல் insist ஆகவேண்டும் என மறுதலிப்பார்கள் ..அவங்க இருக்கட்டும். மத்தவங்க தெரிஞ்சுக்குங்க. நன்றி.