செவ்வாய், 12 ஏப்ரல், 2016

புனைக்கப்பட்ட போலி வழக்கை கண்டித்தும்,இதன் தொடர்ச்சியாக குண்டாஸ்

ஜனநாயக சட்ட திட்டத்தின் அடிப்படையில்,
மதுக்கூர் மைதீன் மீது புனைக்கப்பட்ட போலி வழக்கை கண்டித்தும்,இதன் தொடர்ச்சியாக
குண்டாஸ் போடுவதற்கான பட்டுக்கோட்டை காவல்துறையின்
அராஜக போக்கை கண்டித்தும், நேற்று காலை தஞ்சை கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற போது,அதை பொறுத்து கொள்ள இயலாத பட்டுக்கோட்டை காவல்துறை,இவர்கள் கலெக்டரை சந்தித்து விட்டால் உண்மை வெளிபட்டு விடுமோ,போலி வழக்கை சமர்பித்தது வெட்ட வெளிச்சமாகி விடுமோ,இதனால் நமது வேலைக்கு பாதகம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால்,ஒரத்த நாடு பகுதியிலே வழி மறைத்து மனு கொடுக்க விடாமல் தடுத்தி நிறுத்தி கைது செய்து,மண்டபத்தில் அடைத்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது,ஆனால் காவல்துறையின் தகவல் அறிக்கையோ 55 .