போலீஸ் லாக்கப்'பில் கூலித்தொழிலாளி 'ஷேக் ஹைதர்' மரணம் : நடுத்தெருவில் குடும்பம் !
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாதில் 21-03-2015 அன்று 'சைக்கிள் திருட்டு' தொடர்பான விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி 'ஷேக் ஹைதர்' காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
வயதான தந்தை மற்றும் திருமானமாகாத சகோதரி ஆகியோருக்காக உழைத்துக் கொண்டிருந்த 22 வயது ஷேக் ஹைதரை இழந்த அந்த குடும்பம் நிர்கதியான நிலையில் உள்ளது.
ஷேக் ஹைதரை அடுத்து, 2 முஸ்லிம்கள் என்கவுண்டர், அதற்கடுத்து 5 முஸ்லிம்கள் போலி என்கவுண்டர் என தெலுங்கானா காவல்துறையின் அடுத்தடுத்த அட்டகாசங்கள் காரணமாக ஷேக் ஹைதர் 'லாக்கப் மரணம்' குறித்த செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது .
ஹைதராபாத்தை அடுத்த நிஜாமாபாதை சேர்ந்த கூலித்தொழிலாளியின் குடும்பம் அடுத்தவேளை சோத்துக்கு வழியில்லாமல் சிரமப்படும் விஷயம் எவராலும் கண்டு கொள்ளப்படாத நிலை உள்ளது.
போலீஸ் சித்திரவதை காரணமாக தான் ஹைதர் பலியானார் என்பது 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்டில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையிலும், ஒரு நிவாரணமும் கிடைக்காமல் கடும் சோகத்தில் உள்ள இந்த குடும்பத்தினரை பார்க்க பரிதாபமாக உள்ளது.
போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட படங்களை பார்க்க: