திங்கள், 11 ஏப்ரல், 2016

காவல் நிலையத்தில் நீங்கள் கொடுக்கும் புகாரை ஏற்க மறுக்கும் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்

.,
‪#‎உங்களது‬ புகாரை பெற்றுகொண்டு
‪#‎புகார்‬ ரசீது அல்லது எப்.ஐ.ஆர் நகல் கொடுக்காத நிலையில் ,#புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்.
‪#‎பிரிவு‬ 154 (2) சி.ஆர்.பி. சி படி விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும்
‪#‎இவற்றை‬ ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி மற்றும் 190 1/இ சி.ஆர்.பி. சி
‪#‎மேலும்‬ புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.
‪#‎குற்ற‬ நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.‪#‎குற்றவியல்‬ நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, ‪#‎உயர்‬ நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள #குற்றவியல் நீதிமன்றங்களுக்கும்,‪#‎காவல்துறைக்கும்‬ உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.
‪#‎பாதிக்கப்பட்டவர்கள்‬, தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது.பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.
‪#‎இவ்வாறு‬ பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது‪#‎சாட்சிகளையும்‬ விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் ‪#‎சட்டம்‬ பிரிவு 156 (3)ன் படி #குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.