*நாளை முதல் ஓட்டலில் ரூ.500-க்கு சாப்பிட்டால் ரூ.40 வரி செலுத்த வேண்டும் என்றும் இதே போல் செல்போன் ரீ-சார்ஜுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.*
மத்திய அரசு சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது சேவை வரியை 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தியது.
அது போல சுகாதார திட்டத்துக்கு 0.5 சதவீதமும், வேளாண் மேம்பாட்டுக்கான கிருஷி கல்யாண் திட்டத்துக்கு 0.5 சதவீதமும் சேவை வரியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சேவை வரி மொத்தம் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் 15 சதவீத சேவை வரி ஜூன் மாதம் 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை (புதன்கிழமை) முதல் முக்கிய சேவைகளுக்கு நாம் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில சேவைகளுக்கு சேவை வரியும், மதிப்பு கூட்டு வரியான வாட் வரியும் உண்டு. அத்தகைய சேவைகளுக்கு நாம் கூடுதல் தொகையை வரியாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு நாளை உயர்தர ஓட்டலில் சாப்பிடும் போது, ரூ.500-க்கு சாப்பிட்டாலே, நாம் சேவை வரியாக ரூ.30-ம், வாட் வரியாக ரூ.10-ம் ஆக மொத்தம் 40 ரூபாயை வரியாக கொடுக்க வேண்டும். சில ஓட்டல்களில் பார்சல் உணவு என்றால், அதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள்.
இதன் மூலம் உணவு பண்டங்களின் விலையுடன் ஒவ்வொன்றுக்கும் நுகர்வோரே கூடுதல் தொகையை வரியாக இனி செலுத்த வேண்டும். ஐடிநிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் கும்பல், கும்பலாக சென்று சாப்பிடும் போது சில நூறு ரூபாயை சேவை வரிக்கு செலுத்த வேண்டியதிருக்கும்.
ஓட்டல் பில் மட்டுமின்றி செல்போன் பில், இணையத் தளம் பில், விமானம், ரெயில் டிக்கெட் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், சொகுசு ஓட்டல் அறை வாடகை கட்டணம், சுற்றுலா கட்டணம், சுற்றுலா பேக்கேஜ் மற்றும் சொத்துக்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கும் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி ரூ.1000-க்கு செல்போனில் ரீ-சார்ஜ் செய்தால் 150 ரூபாய் சேவை வரியாக கட்ட வேண்டும்.
மாத சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாயை பல்வேறு சேவைகளுக்கு செலவழிக்கும் பட்சத்தில் அவர் சேவை வரியாகவும், வாட் வரியாக வும் ரூ.750 வரை செலுத்த வேண்டியதிருக்கும்.

நன்றி ( traffic ramasami FB)