செவ்வாய், 21 ஜூன், 2016

'யோகா' நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவேண்டாம் : முஸ்லிம் தனியார் சட்டவாரியம் வேண்டுகோள் !




"பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தின் பெயர் யோகா"
ஜூன்-21 RSS நிறுவனர் ஹெக்டேவரின் நினைவு நாள்!!
நாளை நடைபெறவுள்ள 'யோகா' நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் யாரும் கலந்துக் கொள்ளவேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலான முஹம்மத் வலி ரஹ்மானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து படைப்புக்களும், மனிதர்களின் தேவைகளுக்காக 'அல்லாஹ்'வால் படைக்கப்பட்டவை, அவைகளை பயன்படுத்திக் கொண்டு படைத்த இறைவனை வணங்கவேண்டுமேயல்லாது, அப்படைப்பினங்களை வணங்குவது, அவைகளிடம் உதவி தேடுவது, போன்ற செயல்கள் மடமையாகும்.
ஓரிறை கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்கள் எந்தவொரு செயலையும் ஆய்வு செய்த பின்னரே செய்யவேண்டும், குறிப்பாக நமது ஈமானை கெடுக்கக் கூடிய எந்தவொரு காரியங்களிலும் ஈடுபட்டுவிடக்கூடாது.
யோகா, சூரிய நமஸ்காரம் போன்றவைகள் மூலம் 'பிராமணிய கலாச்சாரத்தை' பாஜக அரசு, விதைக்கப் பார்க்கிறது.
மனுதர்மம், வேதாகமம் போன்ற கொள்கைகளை வேரூன்ற செய்து இஸ்லாத்தை அழிப்பதற்கான திட்டம் தான் யோகா.
பகவத்கீதையின் ஒரு அத்தியாத்தின் பெயர் 'யோகா' என்பதோடு, கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு யோகா சொல்லிக் கொடுத்துள்ளதாக பகவத் கீதையுன் 6-ம் பாகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடியின் முன்முயற்சியால் 'யோகா டே'வாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் 21-ம் நாள் என்பது, ஆர்எஸ்எஸ்'ன் நிறுவனர் 'ஹெட்கேவர்' நினைவு நாள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் யோகாவோடு பொருந்தி வருகிறது.
எனவே, முஸ்லிம்கள் யாரும் யோகா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.