காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்திற்கு குறைவான நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், கர்நாடகாவிற்கு கூடுதல் நீர் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, அனைத்துக் கட்சி தலைவர்களும் அடுத்த வாரம் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளும் இவர்களுடன் பிரதமரை சந்திக்கின்றனர். பிரதமரை சந்திக்க உள்ளதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்தார்.