செவ்வாய், 6 டிசம்பர், 2016

இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற" என்பது தான்.

ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும் கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் புகார் சொல்லப்படுகிறது , அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார்.
"என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தர முடியாத உன்னால ??"
"அம்மா , நான் தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்தவன், என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க, செஞ்சதெல்லாம் வீணா கொட்ட வேண்டி இருக்கு, எல்லாருக்கும் வாங்கி கொடுக்க எனக்கு வசதியும் இல்ல, என்னை மன்னிச்சுருங்க என்று கதறுகிறார் அந்த வேட்பாளர்..
"அப்படியா விஷயம் , சரி நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி"
அந்த வேட்பாளர் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆகிறார்.. யாரும் எதிர்பாராத விதமாக அவர் உணவுத்துறை மந்திரியாக அறிவிக்கப்படுகிறார்..
ஊடகங்களை பொறுத்தவரை அது எப்போதும் போல அவரின் விசுவாசிக்கு வழங்கப்பட்ட பதவி , மக்களை பொறுத்தவரை "அந்தாளுக்கு மச்சம்"
ஆனால் அந்த செயலின் உண்மையான அர்த்தம்
"நீ தாழ்ந்த ஜாதினு சொல்லி உன் வீட்டு சாப்பாடை வேணாம்னு சொன்னாங்களா !!! இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற" என்பது தான்.
அவரின் ஒவ்வொரு அதிரடியான முடிவிற்கு பின்னால் இப்படி ஓரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கக்கூடும்...!!
Alavu Deen S