கணக்கில் வராத பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
பிரதமரின் ஏழைகள் முன்னேற்றத் திட்டம் என்பதன்கீழ், வருமான வரிக் கணக்கு தாக்கலில் காட்டப்படாத தொகையை தெரிவிக்க இந்த திட்டம் வகை செய்கிறது. இந்த புதிய திட்டம் நாளை (டிசம்பர் 17) முதல் 2017ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தின்கீழ் தெரிவிக்கப்படும் பணத்துக்கு 50 சதவிகித வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய வருவாய்த் துறை செயலர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்கீழ் வசூலாகப் போகும் தொகையை ஏழைகள் முன்னேற்றத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்றும் அதியா தெரிவித்தார். இந்த திட்டத்தின்கீழ் தகவல் அளிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றும் அவர்களிடம் வரி வசூல் மற்றும் அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பதிவு செய்த நாள் : December 16, 2016 - 06:26 PM