வியாழன், 8 அக்டோபர், 2015

பன்றிக்கறி சாப்பிடட்டும் , ஆட்டுக்கறி விலை குறையட்டும் !

Arunan Kathiresan


மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு போட்டியாக பன்றிக்கறி சாப்பிடப் போவதாக
அறிவித்திருக்கிறார் எச் ராஜா .நல்லது. அவர் மட்டுமல்லாது ராம கோபாலன் ,
இல கணேசன், சு சுவாமி போன்ற ஆர் எஸ் எஸ் வகையறாக்களும் அதைச்
சாப்பிடட்டும்.அப்போதுதான் ஆட்டுக்கறி விலை குறையும்.கிலோ 500 ரூபாய்க்கு
மேல் விற்கிறது .ஏழைபாளைகள் வாங்கிச் சாப்பிட முடியவில்லை . பன்றிக்
கறியைப் பொறுத்தவரை முஸ்லிம்கள்தான் சாப்பிடுவதில்லையே தவிர பிற
மதத்தவர் சாப்பிடக்கூடாது என்று அவர்கள் (ஆர் எஸ் எஸ் காரர்களைப் போல )
மிரட்டுவதில்லை .எனவே பிரச்சனை ஏதுமில்லை. தாராளமாகச சாப்பிடட்டும்
பன்றிக்கறி.