ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கும் 'வர்தா'... மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு...!

அதி தீவிர புயலான வர்தா நாளை பிற்பகலில் சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை நிலவரப்படி, சென்னைக்கு 440 கிலோ மீட்டர் தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. இதனிடையே வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டரில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடத் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலில் கொந்தளிப்பு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு மீனவர்க‌‌ள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.