ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஊழியர்களுக்கு விடுமுறை.. தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தின் கடலோர வட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதி அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வர்தா புயலால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நாளை (12.12.2016) விடுமுறை எடுத்துக்கொள்ளவோ அல்லது வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.