மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் எண் தொடர்பாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்கள் கிரெடிட், டெபிட் போன்ற பல்வேறு அட்டைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக புதிய ஏற்பாடாக ஆதார் எண் தகவல்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் 30க்குள் முழுமையாக இதைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் - வாடிக்கையாளர்கள் இடையிலான மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பதிவு செய்த நாள் : December 02, 2016 - 09:54 PM