செவ்வாய், 3 ஜனவரி, 2017

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி பதில் தரத் தேவையில்லை... அப்போலோ

Apollo
ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களை தர இயலாது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட் சிகிச்சைகள் குறித்து அப்போலா மருத்துவமனை நிர்வாகம் விவரங்களை வழங்க மனு செய்திருந்தார். ஆனால் தங்கள் மருத்துவமனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும், ஆகையால் இது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்றும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே போல் ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி எந்த அடிப்படையில் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஆளுநருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ராஜ்குமார் அனுப்பியிருந்த மனுவானது பொதுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.