செவ்வாய், 7 மார்ச், 2017

மார்ச் 31ம் தேதி வரை ஏன் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படவில்லை - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

March 07, 2017,ரூபாய் நோட்டு அறிவிப்பில் பிரதமர் உறுதியளித்தப்படி மார்ச் 31ம் தேதி வரை ஏன் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கூறி பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி திடீரென அறிவித்தார். மேலும் செல்லாத நோட்டுக்களை 2017 மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிப்பு வெளியிடபட்டது. அதன் பின்னர் வெளிநாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என திடீரென மேலும் ஒரு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 
இந்நிலையில் சரத்மிஸ்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் மார்ச் 31ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மீறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க வேண்டும் எனக்கோரி விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
source: news7

Related Posts: