உலகில் உள்ள எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் செல்லும் வகையில் விமானங்களை தயாரிக்க முடியும் என ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற நிகிழ்ச்சியில் பேசிய ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலன் மஸ்க், அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் புதிய நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதற்காக நிலவில் முகாம் ஒன்றை அமைக்கவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலவிலிருந்து செவ்வாய்க்கு செல்ல விண்வெளி ஓடம் தயாரிக்கும் நாம், உலகில் உள்ள பகுதிகளுக்கு மணிக்கு 18 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் விமானத்தை ஏன் தயாரிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு 100 பயணிகளை கொண்டு செல்லும் சோதனையை மேற்கொண்டுள்ளதாகவும் எலன் மஸ்க், தெரிவித்துள்ளார்.