திங்கள், 1 மே, 2017

காணவில்லை ! காணவில்லை ! லோக்பால், லோக் அயுக்தா என்று தொடர் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவை காணவில்லை !!!


லோக்பால் அமைப்பை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளியானவுடன் அன்னா ஹஸாரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் உடனடியாக கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லோக்பாலுக்காக போராடி, அதில் வெற்றி பெற்ற அவர்கள், பாஜக ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் ஆனபிறகும் ஏன் அந்த அமைப்புகளை உருவாக்கவில்லை என்று கேட்கவே இல்லை.
காங்கிரஸ் ஆட்சி லோக்பால் அமைப்புக்கு உரிய சட்டதிருத்தம் செய்து, குடியரசுத்தலைவர் ஒப்புதலையும் பெற்றுக் கொடுத்துவிட்டதே…
அதன்பிறகும் ஏன் அமைக்கவில்லை என்றுதான் உச்சநீதிமன்றம் கேட்கிறது…
லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் பாஜக அரசுக்கு என்ன தயக்கம்? நாடாளுமன்றத்தில் பலம்பெற்ற எதிர்க்கட்சி அமையவில்லை என்பது ஒரு காரணமா?
பாஜக நினைத்தால் எதை வேண்டுமானாலும் மீறமுடியுமே…
அப்படித்தானே எல்லாமும் நடக்கிறது…
மாநிலங்களிலாவது லோக் அயுக்தாவை கட்டாயம் உருவாக்க வேண்டும் என்று சொல்லலாமே…
அதற்கு என்ன கஷ்டம் வந்தது…. என்று இளைஞர்களும் மாணவர்களும் கேட்கிறார்கள்…
பதில் சொல்லவேண்டியது மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அம்மா பிரிவும்தான்…
இத்தகைய அமைப்பை உருவாக்குவதற்கு பெரிய தில் வேண்டும்…