புதன், 31 மே, 2017

மாட்டிறைச்சியை தடை செய்ய பாஜக விரும்பினால் நாகாலாந்து தனிநாடாகும்: காங். பகிரங்க எச்சரிக்கை!

கோஹிமா: மாட்டிறைச்சி உண்பதை தடை செய்ய பாரதிய ஜனதா கட்சி விரும்பினால் நாகாலாந்து தனி நாடாகிவிடும் என்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. தெரிஇ எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை கொந்தளிக்க வைத்துள்ளன. கேரளா மாநில அரசு முழு வீச்சில் மத்திய அரசின் தடையை எதிர்த்து போராடி வருகிறது. தமிழகத்திலும்...

இப்ப அடி பார்ப்போம்.. ஐஐடி முன் மாட்டுக்கறி சாப்பிட்டு தந்தை பெரியார் தி.க. அதிரடி!

சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர். இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில்...

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் பரிந்துரை! மாட்டை வைத்து அரசியல் நடத்தி மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக அபார வெற்றி பெற்றது!

ஜெய்ப்பூர்: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. http://kaalaimalar.in/make-cow-national-animal-life-term-for-slaughter...

பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களும் தரமற்றவைதானாம்…ஆர்டிஐ தகவலில் வெளிவந்த பூனைக்குட்டி!

ஹரித்வார் : பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள்...

உ பியில் ஓடும் ரயிலில் நோன்பு வைத்திருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி! கற்பழித்த ரயில்வே காவலர் பெண்ணை தாக்கிய காட்சி!

உ பியில் ஓடும் ரயிலில் நோன்பு வைத்திருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி ( கற்பழித்த ரயில்வே காவலர் பெண்ணை தாக்கிய காட்சி )உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் பெண் பயணி ஒருவர் ரெயிலில் வைத்து ரெயில்வே காவல்துறை கான்ஸ்டபிளால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். 25 வயதான மீரட்டை சேர்ந்த அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கமல் சுக்லா என்ற 24 வயது எஸ்கார்ட் காண்ஸ்டபிள் அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். வன்புணரப்பட்ட...

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லத் தயாராகும் இஸ்ரோ!

மங்கள்யான், சந்திரயான் எனத் தொடர்ந்து விண்வெளித் துறையில் சாதனை நிகழ்த்தி வரும் இஸ்ரோ, அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இனி காணலாம்விண்வெளிக்கு இந்தியர்கள் தயாராகும் இஸ்ரோ:மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட்டை வருகிற ஜீன் 5 அன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இது இந்தியாவின் அதிக எடைகொண்ட ராக்கெட்டாகும். இதன் எடை கிட்டத்தட்ட...

பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கும் அரசு உதவி பெறும் பள்ளி! May 31, 2017

தங்கள் பள்ளியில் சேர்த்தால் அட்டகாசமான பரிசுகள் வழங்கப்படும் என ஒரு பள்ளியின் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் ஆனந்தா என்ற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பர பலகை ஒன்றை வைத்தது. இந்த பலகையின் புகைப்படம் சமூக வலைதளகளில் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் அந்த விளம்பர பலகையில் அறிவிக்கப்பட்ட பரிசுகள் தான் காரணம்....

கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி! குளிர்பானத்தில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி! மக்களே உஷார்!

கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி! குளிர்பானத்தில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி! மக்களே உஷார்! – பகீர் வீடியோ  பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சியால் அடுத்த தலைமுறை சந்ததி பாதிக்கப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணம் மட்டுமே பிரதானமாக செயல்படும் கார்ப்பரேட் கம்பெனிகள் மனித நலன்களை எண்ணி பார்ப்பதில்லை. உலக வியாபார சந்தையில் நஞ்சையும் கொடுத்து அதற்கு மருந்தையும் கொடுப்பது போல உள்ளது. கோக், பெப்சி,...

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்குச் சென்று அதன் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில்...

ஹெஜ் ராஜவை காலாயிக்கும் லியோனி

source : nakkiran&nbs...

7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்! May 31, 2017

தமிழகத்தில் 7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், திருச்சி ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை...

ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது! May 31, 2017

சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள்,...

உணவு விஷயத்தில் அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது: கனிமொழி

மக்களின் உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பழனியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண வரவேற்புவிழாவிற்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை...

மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்நிலையில், புதிய ஒரு ரூபாய்...

தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும்: பாரதிராஜா

தமிழக எல்லைகளே தெரியாதவர்களிடம் அரசியல் பற்றி கேட்கிறார்கள் என, பிரபல இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் 8 பேர் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது...

செவ்வாய், 30 மே, 2017

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..!!, தடைகளை உடைத்தெறிவோம்.!!

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..!!,தடைகளை உடைத்தெறிவோம்.!! மே-29 இன்று தமிழகமெங்கும் கொட்டட்டும் போர் முரசு..!! போராட்ட களத்திற்கு அழைக்கின்றதுதமுமுக....

உஷார் மக்களே !!

    தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான மோரா புயல் கொல்கத்தா அருகே நிலை கொண்டிருந்தது. இன்று காலை 6 மணியளவில் வங்கதேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே மோரா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயலானது...

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி.. ஈழத்தமிழர் அஞ்சலிக்கு தடையா? எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் சுளீர்

சென்னை: முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் உள்பட மற்ற மூவர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை வெளியே வர முடியாமல் அட்டூழியம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திரைப்பட...

சவால் விட்ட திரு.முருகன் காந்தி…

கைகூலி ஏவலால் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் போராட்டக்காரர்கள்…!! வெறி பிடித்து பாஜக.விற்கும் பா.ஜ.காவின் கைகூலி எடப்பாடி அரசுக்கும் சவால் விட்ட திரு.முருகன் காந்தி…!! தமிழக அரசு ஆண்மை இழந்து அடிமையாகிவிட்டதுதான் இதற்கு காரணமா..?? தமிழா விழித்திடு… http://kaalaimalar.in/may-17-gandhi/...

சஹர் உணவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,நோன்பாளிக்கு ஓர், நர் செய்தி புதுக்கோட்டை காமராஜபுரம் பள்ளிவாசல் அருகில் இருக்கும்( குட்லக் ஹவுஸ் )இறைவனின் நாட்டத்தால் கடந்த 27.வருண்டங்களாக நோன்பு வைக்க கூடிய( விலை இல்ல உணவு) நோன்பாளிக்கு சஹர் உணவு கொடுத்து வருகிறார்கள் இந்த வருடமும் ஏற்ப்பாடு சிறப்பாக செய்யபட்டுவுள்ளது வெளியூர் உள்ளூர் நோன்பாளிகள் வழக்கம் போல் பயன் படுத்திக்கொள்ளவும், தொடர்ப்புக்கு .குட்லக் மீரா ex mc.9443346313 .9940334203.(குறிப்பு மாலை 7. மணிக்குள்...

ஃபேஸ்புக் நட்பால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! May 30, 2017

பூனேவில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வருசங்களுக்கு முன்பு பூனேவில் சாகர் கிருஷ்ணா என்பவருக்கு ஃபேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களுடைய நட்பு தினமும் தொடர்ந்துள்ளது. முதலில் சிறிது நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் உரையாடி வந்த இருவரும், சிறிது காலத்திற்கு பிறகு மொபைல் போனிலும் பேச ஆரம்பித்தனர். இவர்களின்...

மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை! May 30, 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிராக செல்வ கோமதி, ஆஷிக் இலாகி பாபா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு என்பது அடிப்படை உரிமை என்றும்  அதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர்....

மாட்டுக்கறி உண்ட ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்! May 30, 2017

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாட்டுக் கறி விருந்து உண்ணும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சூரஜ் எனும் மாணவர், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற...

மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எச்சரிக்கை! May 30, 2017

பசுவதை தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் அனைத்து மக்களையும் திரட்டி போராட்டம் நடத்த போவதாக தமிழக எதிர் கட்சிகள் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதாரண மனிதனின் உண்ணும் அதிகாரத்தை...

வித்ரு தொழுகையில் சட்டம் என்ன

...

கண்டன ஆர்ப்பாட்டம்!

மாடு விற்பனையை தடை செய்த மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ...

ஹிட்லரின் வழியில் ஆர்எஸ்எஸ் நடைமுறைப்படுத்தும் கருத்தரித்தல் திட்டம் பேரா.த.அபுல்பாசல் 29 MAY 2017

இந்துத்துவ அமைப்புகள் மனிதகுல விரோதிகளான ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசத் தலைவர்களின் மீது வைத்திருந்த பற்றைப் பற்றி உலகம் அறியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூஞ்சே, இத்தாலி நாட்டுக்குச் சென்று அங்கு முசோலினியை சந்தித்ததும், அவருடைய பாசிச சிந்தனைகளைப் பாராட்டியதற்கும் மூஞ்சேயின் நாட்குறிப்பே சான்று. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர், ஹிட்லரின் ஆரிய தேசிய மேலாண்மையை ஆதரித்து தனது நூலில் எழுதிய கருத்துக்கள் உலகம் அறிந்ததே. “தனது...

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் நாஞ்சில் சம்பத் கோரிக்கை! May 30, 2017

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் என அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அக்கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் மீது போடப்பட்ட...