சனி, 27 மே, 2017

ஜாதிப் பிரச்சனை கிளப்பிய இந்துத்துவா கைக்கூலி போலீஸ் எஸ்ஐ ; 10 நிமிட கெடுவால் கொந்தளித்த பொதுமக்கள்!!

ஜாதிப் பிரச்சனை கிளப்பிய இந்துத்துவா கைக்கூலி போலீஸ் எஸ்ஐ ; 10 நிமிட கெடுவால் கொந்தளித்த பொதுமக்கள்!! 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா மாரனேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமம் டி.கான்சாபுரம் கிராமத்தில் பிள்ளைமார் மற்றும் தேவர் சமுகத்தினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
கடந்த மே 2ம் தேதி, தேவர் சமுதாயம் சார்பிலும், 24ம்தேதி, பிள்ளை சமுதாயம் சார்பிலும் இந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இங்கு சில பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், மாரனேரி காவல் நிலைய எஸ்ஐ., மருது பாண்டி கான்சாபுரம் கிராமத்திற்கு சுமார் இரவு 11 மணிக்கு வந்துள்ளார். அப்போது, ஜாதி பெயரைக் கூறி இந்த பேனரை வைத்தது என இழிவாகவும் ஒருமை வார்த்தைகளிலும் பேசியுள்ளார்.
இதனை தாங்க முடியாத அங்கிருந்த இளைஞர்களை தாக்க முயன்றுள்ளார். ‘‘வைத்த பேரை அகற்ற உனக்கு 10 நிமிடம் காலக்கெடு இல்லை என்றால் ஜாதி பிரச்சனை தூண்டிய வழக்கில் உங்களை சீரழித்து விடுவேன்’’ என எஸ்ஐ., மிரட்டியுள்ளார். மேலும், எங்கள் ஜாதித் தலைவர் சிலை வர இருந்ததை நீங்கள் தடுத்தா நிறுத்திவிட்டீர்கள் என இழிவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள், காவல் துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்திற்கு ஏற்ப அவர் செயல்படாமல், அவருடைய ஜாதியை வைத்து பேசிய செயல் கண்டிக்கத் தக்கது. ஒரு சமூகத்ததை வேண்டுமென்றே இழிவுபடுத்த வேண்டும் என்பது போல் அவர் செயல்பட்டார். எனவே அவர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

http://kaalaimalar.in/sivakasi-protest-for-police-si-action/