புதன், 3 மே, 2017

தண்ணீர் பஞ்சமா; வெட்றா 200 ஏரிகள: சொந்த ஊருக்காக களமிறங்கிய வைர வியாபாரி!

சூரத்: தண்ணீர் பஞ்சத்தை போக்க புதிதாக 200 ஏரிகள் வெட்டி, வைர வியாபாரி பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி துலாகியா. இவர் தனது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார்களையும், ஸ்கூட்டர்களையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான துத்ஹாலா கிராமத்தில் தண்ணீரின்றி வறட்சியால் தவித்து வருகிறது. அதனை தவிர்க்கும் வகையில், புதிதாக ஏரிகளை வெட்டி வருகிறார். ஒட்டுமொத்தமாக 20 கிராமங்களைச் சேர்ந்த 80,000 மக்கள் பயன்பெறும் வகையில், 20 ஏரிகள் வெட்டி வருகிறார். துலாகியா, வைரம் பாலிஷ் செய்யும் தொழிலாளியாக பணியை தொடங்கி தற்போது ரூ.6000 கோடிக்கு சொந்தக்காரராக வளர்ந்துள்ளார்.

Related Posts: