சனி, 27 மே, 2017

கீழடியில் 3வது கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது! May 27, 2017

கீழடியில் 3வது கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது!


சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3வது கட்ட அகழாய்வுப் பணி இன்று தொடங்கியுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் கூடிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு அகழாய்வுப் பணி நடைபெற்று வந்தது. 

இதனிடையே 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறாமல் இருந்ததால் இதனை உடனே நடத்தவேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து கீழடியில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. 

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் தொடங்கியுள்ள இந்த அகழாய்வுப் பணியில் அக்கிராம மக்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த அகழாய்வில் பழங்கால கட்டட அமைப்புகள் மற்றும் தொல்லியில் எச்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.