மக்களின் உணவு முறையை அரசு நிர்ணயிப்பது சரியல்ல என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு நேற்று திடீர் தடை விதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த செயல் ஜனநாயக நாட்டில் பொருத்தமற்ற நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களின் உணவு முறையை அரசு நிர்ணயிக்க கூடாது எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நாட்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருவது தெரிவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.