செய்யாத தவறுக்கு 7 பேர் காட்டுமிராண்டி தனமாக அடித்துக்கொள்ளப்பட்ட கொடூர சம்பவம் நமது நாட்டில் அரங்கேறியுள்ளது. தாக்குதலின்போது, தன்னை விட்டும்படி ஒருவர் கைகூப்பி கெஞ்சிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் பதறவைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய நகரமான ஜாம்ஷெட்பூரின் அருகில்தான் இந்த கொடூர சமப்வம் நடைபெற்றுள்ளது. சோபர்பூரில், குழந்தை கடத்தல்காரர்கள் அதிக அளவில் நடமாடிவருவதாகவும், தங்கள் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளும்படியும் வாட்ஸப் வாயிலாக வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் காட்சிலா எனும் பகுதியைச் சேர்ந்த முகமது நயீம், தங்களின் தொழில்நிமித்தமாக நண்பர்கள் 4 பேருடன் சோபர்பூரை கடந்து காரில் சென்றுகொண்டிருந்தார் .அப்போது அவர்களின் காரை மறித்து அவர்களை வெளியேற்றிய அப்பகுதி மக்கள், 5 பேரையும் குழந்தை கடத்தல்காரர்கள் எனக் கருதி மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில் முகமது நயீம் உள்ளிட்ட 5 பேரும் அதே பகுதியில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பதற்கு முன்பாக முகமது நயீம் தன்னை தாக்குபவர்களிடம் கைகூப்பி தன்னை விட்டுவிடும்படி கெஞ்சும் புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வெளியாகி அனைவரையும் பதபதைக்க வைத்துள்ளது. 5 அப்பாவிகளையும் கொடூரமாக தாக்கிக் கொலை செய்த அந்த கும்பல், அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. காவல் நிலையத்திற்குக்கூட தகவல் கொடுக்காமல், 5 பேரையும் 4 மணி நேரமாக சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் அந்த மனிதாபிமானமற்ற நபர்கள்
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 5 பேரும் அப்பகுதியில் சடலமாகக் கிடந்துள்ளனர். இன்னொரு கொடுமையான நிகழ்வு என்னவென்றால், இதற்கு முந்தைய வாரமும் இதேபோன்ற சந்தேகத்தால் 2 பேரை அப்பகுதி மக்கள் அடித்துக்கொன்றுள்ளனர். இதேபோன்று, கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, குதுப்தீன் அன்சாரி என்பவர் உயிருக்காக கையெடுத்து வேண்டிக்கொள்ளும் காட்சிகள் அனைவரையும் நெஞ்சையும் பதறவைத்தது. ஆனால், தகுந்த நேரத்தில் அன்சாரி காக்கப்பட்டார். நயீம் உள்ளிட்ட 5 பேருக்கு அது நடக்கவில்லை. உயிரிழந்த நயீமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
உயிரிழந்த நயீமிற்குக் அரசால் கொடுக்கப்பட்ட ரூ.2லட்சம் நிவாரணத் தொகையை, அவர் மனைவி ஏற்க மறுத்துவிட்டார். அப்பாவி கணவரை ஈவு இறக்கமின்றி கொன்றவர்களை நீதிமன்றத்தின் மூலம் தண்டிப்பதையே அவர் விரும்புகின்றார். எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் சந்தேகத்தின் பேரினால் மட்டுமே 7 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது மனிதாபிமானமே மண்ணில் புதைக்கப்பட்டதற்கான ஒரு சான்றாகும்.