புதன், 24 மே, 2017

உலகை 8.5 முறை சுற்றி வந்த பிரதமர் மோடி May 24, 2017

வருகிற மே 29ம் தேதி பிரதமர் மோடி, நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில் மோடி மேற்கொண்டு வெளிநாடு சுற்று பயணங்கள் குறித்த விவரங்களை பார்போம்.

➤2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பிரதமர் மோடி 55 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

➤மோடி இதுவரை 45 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் 

➤3 வருட ஆட்சிக்காலத்தில் 134 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் 

➤2015ம் ஆண்டு பிரதமர் மோடி அதிகபட்சமாக 27 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

➤பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவு - ரூ. 275 கோடிக்கு மேல் 

➤ஏப்ரல் 2015 - அதிகபட்ச செலவு - பிரான்ஸ், ஜெர்மனி, கனடா 8 நாள் பயணம் - ரூ.31.2 கோடி 

➤ஜூன் 2014 - குறைந்தபட்ச செலவு - பூடான் 2 நாள் சுற்றுப்பயணம் - ரூ. 2.48 கோடி 

➤கணக்கு பார்த்தால் கிட்டத்தட்ட 8.5 முறை உலகைச் சுற்றியுள்ளார் பிரதமர் மோடி 

Related Posts: