புதன், 24 மே, 2017

நாட்டையே ஆட்டிப்படைத்த பவர்ஃபுல் சாமியார்… பிரதமரையே கொலைசெய்தவர்?…. எந்த தண்டனையும் இல்லை… காலமாகிவிட்டார் !

ஒரு காலத்தில் பவர்ஃபுல் மனிதராக இந்திய அரசியலில் வலம் வந்தவர் சந்திராசாமி. சுப்ரமணிய சாமியின் நண்பர்.
இதற்கு மேல் அவரை பற்றி என்ன சொல்ல வேண்டும்… சர்ச்சை.. சர்ச்சை… சர்ச்சை.. தான்.. ராஜஸ்தான் பூர்வீகத்தை கொண்ட சந்திராசாமி, மந்திர வித்தைகள் கற்று, முன்னாள் பிரதமராக இருந்த நரசிம்மராவின் நட்பை பெற்றார். இதனால் பவர் ஃபுல் மனிதராக உருவெடுத்தார்.
இந்திரா காந்தி இவருக்கு ஆசிரமம் கட்ட இடம் அளித்தார். பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசகராக இருந்த மனிதர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
விடுதலைப் புலிகள் தான் ராஜிவ் காந்தியை கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும், உண்மையான காரணம் அதுவல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
புலிகள் இயக்கத்தின் சில உறுப்பினர்களை துருப்பு சீட்டாக கொண்டு, இஸ்ரேல் என்ற சர்ச்சைக்குரிய நாட்டின் உளவுத்துறையான மொஸாத் அமைப்பு மற்றும் சந்திராசாமியின் ஆட்கள் தான் ராஜிவ் காந்தியை கொன்றார்கள் என்ற வாதம் இப்போதும் அடங்கியபாடில்லை.
ஆனால் தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், ராஜஸ்தானை சேர்ந்த ஜெயினான சந்திரசாமி மட்டும் சகல சவுகர்யங்களுடன் சுதந்திரமாக வெளிநாடுகளில் இன்பம் அனுபவித்தார்.
அவர் மீது பல வழக்குகள் இருந்தாலும், நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்ல இருந்த தடைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது.
இப்படிப்பட்ட சர்ச்சைகளின் மொத்த உருவமான சந்திராசாமி  இன்று காலமாகி விட்டார். அவர் மீது நிலுவையில் உள்ள பல நிதி மோசடி வழக்குகளும் தான்..
http://kaalaimalar.in/godman-chandraswami-whose-named-figured-in-rajiv-killing-case-dies/

Related Posts: