பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை நுங்கு நன்மைகள் பல தரக் கூடியது ஆகும். இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கியப் பலன்கள் ஏராள மானவையாகும்.
அவற்றை சிலவற்றினை இங்கு பார்ப்போம்.
பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத் தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பனை நுங்கை சாப்பிடலாம்.
பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச் சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனை நுங்கு மருந்தாக பயன்படுகிறது.
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கு்டித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய் களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.