புதன், 24 மே, 2017

மிழை ஆட்சிமொழி ஆக்கி நம் மொழியையும், இனத்தையும் மதித்த சிங்கப்பூரின் தந்தை:

சிங்கப்பூர் என்றால் சுத்தம் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அந்த நாடு பராமரிக் கப்படுகிறது. அங்கே விதிக்கப்பட்டிருக்கும் அரசு விதிகளும் அதை மக்கள் மீற முடியாத அளவுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளும் ஆச்சரியத்தை தருகின்றன.
மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூட பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. சாலைகள் அத்தனை சுத்தம்.
எங்கேயும் ஹோர்டிங்குகள், விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள் கிடையாது.
எல்லா இடங்களிலும் தள்ளு முள்ளு இல்லாமல் மக்கள் பஸ்ஸுக்கும் டாக்ஸிக்கும் அநியாயத்துக்கு வரிசையில் காத்திருந்து ஏறுகிறார்கள்.
ஆட்டோக்கள் இல்லாத நகரமாக இருக்கிறது சிங்கப்பூர்.
முக்கியமான எல்லாப் பொது இடங்களிலும் லேசாய் நிமிர்ந்து பார்த்தால் “This area is under camera surveilance” என்று ஒரு சின்ன அறிவிப்பும் சில கண்காணிப்புக் கேமராக்களும் எச்சரிக்கை செய்யும்.
உலகிலேயே சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான் மிக அதிகளவில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முன்னரோ பராமரிக்க முடியாத ஒரே காரணத்தால், மலேசியா வருத்தத்துடன் கைவிட்ட நாடு  சிங்கப்பூர்.
போதுமான குடிநீர் கிடையாது. கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது. ஆனால், தனியாகப் போராடி, தொழில்த் துறையில் வல்லரசுகளுக்குச் சவால் விடும் அளவு முன்னேற்றம்…
மென்பொருள், வன்பொருள் வல்லுனர்கள் அதிகமாய் வேலைக்குச் செல்ல ஆசைப் படும் நாடு. சுற்றுலாத்துறையில் அபரிவிதமான வளர்ச்சி.
இத்தனையும் சாத்தியமானது ஒரே ஒருவரால்- லீ க்வான் யூ.
எப்படி சாத்தியமானது அனைத்தும்…???!!!
அவரது ஒரே சூத்திரம்  சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்…
தமிழை ஆட்சிமொழி ஆக்கி அழகு பார்த்தார்.
எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான் அத்தனை தமிழனும். இன்னும் முக்கியமாக,
இலங்கையில் நடந்தது, இனப்படுகொலை (Genocide) என்று உலக அரங்கிற்கு உரக்கச் சொன்னவர் அய்யா லீ க்வான் யூ..
நம் மொழியையும், இனத்தையும் மதித்த சிங்கப்பூரின் தந்தைக்கு , உலகத் தமிழர் அத்துணை பேரின் சார்பிலும் புகழ் வணக்கம் செலுத்துவோம்..

Related Posts: