ரஜினி, கமல் என்று ரவுண்டு கட்டி அடித்த சு.சாமி கொஞ்ச நாட்கள் ஓய்வாக இருந்தார். இடைப்பட்ட நேரத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.
நேற்று முதல் ரஜினி ரசிகர்களை சந்திப்பதும் அவர்களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்வதும், அரசியலில் இறங்க முடிவெடுத்திருப்பாதாகக் கூறுவதும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாகி விட்டது.
சத்தம் இல்லாமல் இருந்த சுப்ரமணியசாமி தனது கருத்தைப் பொளேர் என்று வைத்திருக்கிறார். படிங்க..!
’ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று காலை, ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, அவர் அரசியல் குறித்து உரையாடினார். அவர் பேசிய வாசகங்கள் குறித்து தற்போது பல தரப்பட்ட கருத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணியம் சாமி கூறுகையில், “ரஜினிக்கென ஒரு கொள்கையே கிடையாது.
அவர் தமிழரே கிடையாது. அவர் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்தவர். தமிழ் பொறுக்கிகளை நன்றாக ஏமாற்றுகிறார்.
அரசியலில் அவரால் வெற்றி பெறவே முடியாது. அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பற்றி பேசி வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று கூறியுள்ளார்.
ஸ்வாமிக்கு நேரம் சரியில்லையோ..?
http://kaalaimalar.in/rajini-is-not-tamil/