செவ்வாய், 9 மே, 2017

*கண்டண அறிக்கை*

*கண்டண அறிக்கை*
இளங்கலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான *நீட் நுழைவுத் தேர்வு* (National Eligibility cum Entrance Test) இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இன்று நடைபெற்ற தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வு கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
*இதனிடையே தேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் மாணவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.*
பெல்ட், தொப்பி, மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், சட்டை பின், பேட்ஜ் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து தேர்வு எழுத தடை. அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும். ஆடையில் பெரிய பொத்தான்களோ, பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது.
மேற்கூறப்பட்டுள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த *போதிய தகவல் கிராமப்புறத்திலிருந்து தேர்வெழுத வந்த மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்த பின்பு சட்டையைக் கிழித்து தேர்வு எழுதச் சென்ற அவலம் நேரிட்டது.*
கடுமையான விதிமுறைகளுடன் நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
*இதுவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் கண்ணனூரில் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.*
*ஐந்து நிமிடம் காலதாமதாக சென்றதால் சேலத்தில் மூன்று மாணவ மாணவிகளை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.*
இதனால் அந்த மாணவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.
*அராஜகத்தின் உச்சம்:*
தேர்வு எழுதும் அறைக்கு சென்ற மாணவிகள், திரும்ப வந்து உள்ளாடைகளை அளித்து விட்டு சென்றதாக ஊடகங்களில் பேட்டியளித்த பெற்றோர்கள் கூறினர். உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதியதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
வளரும் சமுதாயத்திற்கு இதைவிட ஒரு கேவலத்தை ஏற்படுத்த இயலாது என்பதைஇதன் மூலம் மத்திய ஆட்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த தேர்வுமுறை முழுமையாக வசதிபடைத்தவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பது மீண்டும் இதன்மூலம் உறுதிசெய்துள்ளது மத்திய அரசு. ஏழை எளிய நடுத்தர மக்கள், கிராமப்புற மாணவர்கள் இத்தேர்வினை எதிர் கொள்ளவே முடியாது. அதற்கான தரமானக் கல்வியோ, உள் கட்டமைப்போ ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் இல்லை என்பதைக் கூடவா மோடி அரசு தெரிந்திருக்கவில்லை.
நீட் தேர்வை சந்திக்கும் நிலையில் அனைத்து மாணவர்களும் இல்லாத நிலையில் இத்தேர்வு முறையை கட்டாயமாக்கும் போக்கையும், தேர்வுக்கு வந்த மாணாக்கர்களை அவமானப்படுத்திய செயலையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்திற்கு கடந்த ஆண்டு போல் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத் .
கோவை வடக்கு மாவட்டம்.
தொடர்புக்கு 7502699111/122/133

Related Posts: