செவ்வாய், 9 மே, 2017

குடிநீர் தட்டுப்பாடால் தமிழக மக்கள் கடும் அவதி!

குடிநீர் தட்டுப்பாடால் தமிழக மக்கள் கடும் அவதி!


தமிழகத்தின் நிலவிவரும் கடும் வறட்சியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் வேண்டி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

விருதுதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், பெரும்பாலான வார்டுகளில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுலகத்தை முற்றுகையிட்ட மக்கள், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பசும்பொன்நகர், சுப்பிரமணியபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சரி செய்யது கொடுக்குமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்த திமுக நகர செயலாளர் நைனாமுகமது, உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Related Posts: