சாமியார் ஓம், பெண்களை இழிவாகப் பேசுபவர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை இழிவாகப் பேசி அடிவாங்கியவர். அப்படி இருக்கையில் அவரை எப்படி சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் என பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசுவதற்காக மேடைக்கு சென்ற அவரை அங்கிருந்த ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்தார். சுற்றியிருந்த மற்றவர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ஆனால் சிலர் சாமியாரை விடாமல் அடித்துத் துவைத்தனர்.
தப்பித்தால் போதும் என தெறித்து ஓடிய சாமியாரின் விக் கழண்டுவிட்டது. அடி வாங்கிக் கொண்டிருக்கும் போது விக்கைப் பற்றி யோசிக்கவா முடியும்? விக்கைக் கையில் பிடித்தபடியே ஓடினார்.
சினிமாவில் வரும் போலி சாமியார்கள் விக்குடன் ஓடுவது போல சாமியார் ஓம், விக்குடன் ஓடினார். பின்னர் அவரை விழா ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
http://kaalaimalar.in/swami-om-beaten-by-public-again-in-delhi/