முகமது என்பவர் தனது டொயோட்டோ இனோவா காருக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆனந்த் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பியுள்ளார்.
அவர் காரில் சுமார் நான்கு அல்லது ஐந்து லிட்டர் டீசல் இருந்த நிலையில், டேங் நிரப்ப கேட்டுள்ளார். பெட்ரோல் பங்க் ஊழியர் டேங் நிரப்பி விட்டு, பில் கொடுத்துள்ளார். பில்லை பார்த்து முகமது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காரணம், காரில் டேங் கொள்ளவே 55 லிட்டர் தான் ஏற்கனவே ஐந்து லிட்டர் இருந்த நிலையில், 50 முதல் 52 லிட்டர் வரை தான் டேங் பிடிக்கும். எப்படி 63.99 லிட்டர் பிடித்தது என்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ஊழியர் அது எல்லாம் எனக்கு தெரியாது, எங்கள் பங்க் மிஷன் என்ன காண்பிக்கிறதோ அது தான். பெட்ரோலுக்கு உண்டான பணம் ரூ 3 ஆயிரத்து 760 ஐ கொடுத்து விட்டு இடத்தை காலி செய்யுமாறு கேட்டுள்ளார்.
பங்க் ஊழியரிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் ஏற்று கொள்வதாக இல்லை. பங்க் உரிமையாளரும் இல்லை. இரவு 10மணிக்கு மேல் ஆகிவிட்டதால் காரில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் இருந்தால் வேறு வழியின்றி, வங்கி கார்டு மூலம் ஊழியர் கேட்ட பணத்தை செலுத்திவிட்டு வந்து விட்டார்.
இது குறித்து யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல், அகமது வலைதளம் மூலம் மத்திய மாநில அரசு இது போன்ற தவறுகளை கவனித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இது போன்ற தவறுகள் மாநிலம் முழுவதும் பல பங்க்களில் நடக்கதான் செய்கிறது. அது நமக்கு தெரிவதில்லை.
பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப 100, 200, 500, 1000 என
பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப 100, 200, 500, 1000 என
ரூபாய் மதிப்பில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதன் மூலம் சில பெட்ரோல் பங்க்குகள் இது போன்ற ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறது. எனவே வாகன ஓட்டிகள் ரூபாய் மதிப்பில் பெட்ரோல் போடாமல் லிட்டர் கணக்கில் பெட்ரோல் போட்டால் நம்மை ஏமாற்ற முடியாது.
‘ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள்’