சனி, 27 மே, 2017

காவிகளின் கூடாரமாக மாறிவிட்டது இந்தியா” – சீறித்தள்ளிய சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் அரசியல் பொதுவாகவே வித்தியாசமானதாக இருக்கும். அதிர்ந்து பேசாமல், எமோஷன் ஆகாமல் சன்னமான அதேநேரத்தில் சரக் சதக் ஷார்ப்பான வார்த்தைகளால் அரசியல் எதிரிகளை போட்டுத்தாக்குவார். 
ஆனால் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திய கோபம் இன்னும் தணியா நிலையில் எமோஷனலிஸ்டாக மாறிவிட்டார் போலும். 
சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர் “ பா.ஜ.க.வை மக்கள்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால் இது ஜனநாயக ஆட்சிதான். பிரதமராக மோடியை மக்கள்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அதனால் அவரை தரக்குறைவாக பேசுவதை ஏற்க மாட்டேன்.” என்று நல்லபிள்ளையாக துவக்கியவர் “ஆனால் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் கடமை நமக்கிருக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லோரது கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் என்றார்கள். போட்டார்களா? பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கள்ளப்பணம் ஒழியும் என்றார்கள் ஒழிந்ததா?
பா.ஜ.க.வின் மூன்றாண்டு ஆட்சி நிறைவு பெற போகிறது. 56 இன்ச் மார்பு பற்றி பேசியவரின் ஆட்சியில்தான் இந்திய ராணுவ வீரர்கள் கொத்து கொத்தாக சாகடிக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் பெண்கள் கல் எறிகிறார்கள். இந்தி திணிக்கப்படுகிறது, இந்து மதவாதிகள் மதத்தை திணிக்கிறார்கள். ஆட்டுக்கறி வைத்திருந்த ஒருவரை மாட்டுக்கறி வைத்திருப்பதாக ஒரு கும்பல் கொல்கிறது. காலிகளின் கூடாரமாக மாறிவிட்டது இந்தியா.
கருந்த்து சுதந்திரம் இல்லை, சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது, அடக்கி வைக்கப்பட்டிருந்த நக்சல்கள் தலையெடுக்கிறார்கள், காலி கும்பலும் காவி கும்பலும் உலா வருகிறார்கள். இதையெல்லாம் தடுக்க இந்திய மக்கள் கேள்வி கேட்க வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒரு இயக்கமாக மாறி டெல்லியில் எதிரொலித்து இந்த கும்பலின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.” என்று பொங்கி தீர்த்திருக்கிறார். 
அடிபட்ட ப.சிதம்பரத்துக்கே இவ்வளவு கோவம்னா அடிச்ச அந்த மனிதருக்கு எம்புட்டு கோவம் இருக்கும்?!
http://kaalaimalar.in/p-chidambaram-modi-activities/